குஷ்பு இட்லி

Visitors have accessed this post 283 times.

குஷ்பு இட்லி

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

புழுங்கல் அரிசி4 டம்ளர்

பச்சரிசி4 டம்ளர் 

உளுத்தம் பருப்பு2 டம்ளர் 

சின்ன ஜவ்வரிசி2 டம்ளர்

வெந்தயம்4 டீஸ்பு+ன் 

ஆமணக்கு விதை6

உப்பு தேவையான அளவு 

செய்முறை :

 

🍪 குஷ்பு இட்லி செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகவும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

 

🍪 அடுத்து ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, ஆமணக்கு விதை, வெந்தயம் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 

🍪 அடுத்து ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நன்கு அரைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து 10 மணி நேரம் புளிக்க விடவும். 

 

🍪 இட்லி தட்டுகளில் எண்ணெயை தடவி, புளித்த மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

 

🍪 சுவையான குஷ்பு இட்லி தயார்.

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam