Visitors have accessed this post 759 times.

சமையல் அறையில் கவனிக்க வேண்டியவை?

Visitors have accessed this post 759 times.

சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை!

 

🔥 ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

 

🔥 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

 

🔥 குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

 

🔥 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

 

🔥 கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.

 

🔥 ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனையாக இருக்கும்.

 

🔥 கீரை, வெண்டைக்காய் வேக வைக்கும்போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமையான நிறம் மாறாமல் இருக்கும்.

 

🔥 பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் தூவினால், தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.

 

🔥 தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

 

🔥 குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உட்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, பஜ்ஜி போடலாம். ருசியாக இருக்கும்.

 

🔥 சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவைக் கரைத்து விட்டு அரைத்தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

 

🔥 குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லியை போடக்கூடாது.

 

🔥 தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.

 

🔥 ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது.

 

🔥 மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய்களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

 

🔥 மோர்க் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது சிறிதளவு ஓமத்தை சேர்த்து அரைத்தால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

 

🔥 சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்க வாசனை கமகமவென்று இருக்கும்.

 

🔥 பு+சணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

 

🔥 ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சு+ப்பராக இருக்கும் ரசம்.

 

🔥 வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தேங்காய்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam