Visitors have accessed this post 773 times.
சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
பச்சரிசி1 கிலோ
பாசிப்பருப்பு100 கிராம்
பால் அரை லிட்டர்
முந்திரி 15
உலர் திராட்சை 15
வெல்லம் 800 கிராம் (பொடித்தது)
நெய்200 கிராம்
பச்சை கற்பு+ரம்1 சிறிய கட்டி (பொடித்தது)
ஏலக்காய் பொடி1 டீஸ்பு+ன்
தேங்காய் துருவல்கால் கப்
தண்ணீர்தேவையான அளவு
செய்முறை :
சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு, அரிசி மற்றும் பாசிபருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறவும்.
வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பு+ரத்தை போட்டு கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரைப் பொங்கல் தாயார் இது போன்ற பல ரெசிபி கமிங் சூன்