Visitors have accessed this post 503 times.

சாப்பிட்ட உடன் பாத்ரூம் போகும் பழக்கம்… தீர்வு உண்டா?

Visitors have accessed this post 503 times.

சாப்பிட்ட உடனே சிலருக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். சாப்பிட்ட உடனே பாத்ரூம் போகும் பழக்கத்தை `கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ்’ (Gastroenterology reflex) என்று சொல்கிறோம். 

சாப்பிட்டதும் உடனே பாத்ரூம் போகும் பழக்கம் இருக்கிறது. இதனால் வெளியிடங்களில், விசேஷங்களில் சாப்பிடுவதே இல்லை. இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்னையா? குணப்படுத்த வாய்ப்புண்டா? உணவு முறையில் மாற்றம் தேவையா?  

சாப்பிட்ட உடனே பாத்ரூம் போகும் பழக்கத்தை `கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ்’  (Gastroenterology reflex) என்று சொல்கிறோம். சாப்பிட்ட உடனே சிலருக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். சிலர் உடனே மலம் கழிப்பார்கள். 

சாப்பிட்ட உணவானது வயிற்றுக்குள் இறங்கியதும் சில ஹார்மோன்கள் சுரக்கும். செரிமானமாகி, மலக்குடலில் உள்ள உணவைத் தூண்டி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கும். இப்படி ஏற்பட பல மருத்துவ காரணங்கள் இருக்கலாம். 

இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) எனும் பாதிப்பில் இப்படி ஏற்படலாம். மனப்பதற்றமும், ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமுள்ளோருக்கும் இப்படி ஏற்படலாம். சிலவகை உணவுகள் இந்த உணர்வைத் தூண்டலாம். சீலியாக் டிசீஸ் (Celiac disease) எனும் பாதிப்பும், இன்ஃப்ளமேட்டரி பவல் டிசீஸ் (Inflammatory bowel disease) எனும் பாதிப்பும்கூட காரணமாகலாம். 

இந்த பாதிப்பு உள்ளவர்கள் முதலில் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அவசியம் தவிர்த்தாக வேண்டும். 

வெண்ணெய் போன்று கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு பால் மற்றும் பால் உணவுகள்கூட இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam