Visitors have accessed this post 432 times.
சீரகசம்பா பாயாசம்:
தேவையான பொருட்கள் :
சீரகசம்பா அரிசி – 250 கிராம்
தண்ணீர் – 2 லிட்டர்
தேயிங்காய்பால் – 2 கப்
உருண்டை வெல்லம் – 500 கிராம்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி – 100 கிராம்
நெய் – 2 ஸ்பூன்
திராட்ச்சை – 20
செய்முறை:
சீரகசம்பா அரிசியை நன்றாக கழுவி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைக்கவும். பின்பு அரைத்து வைத்த தேயிங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கொதி வந்ததும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
உருண்டை வெல்லத்தை நன்றாக பொடி செய்து 1/2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாயாசத்தில் சேர்க்கவும்.
இறுதியில் நெய்யில் வறுத்த திராட்ச்சை,முந்திரி இரண்டையும் சேர்த்து இறக்கவும்.
சீரகசம்பா அரிசியின் பயன்கள்:
சீரகசம்பா அரிசியின் பூர்வீகமே நம் தமிழகம்தான். பழமையான அரிசி ரகங்களில் இதுவும் ஒன்று.
சீரகசம்பா அரிசியில் புரோட்டீன், செலினியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது.
இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.
பல வகைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த சீரக சம்பா அரிசியை நீங்களும் பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.