Visitors have accessed this post 782 times.
செட்டிநாடு வாழைக்காய் மசாலா
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
வாழைக்காய் 1 (நீளமாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு
அரைக்க :
பச்சை மிளகாய் – 2
இஞ்சி விழுது – 1 டீஸ்பு+ன்
சிறிய வெங்காயம் – 5
பூண்டு பல் – 5
தேங்காய் – சிறிது
மிளகு, சீரகம், சோம்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
தாளிக்க :
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தௌpத்து அரைக்கவும்.
பின்பு அதே வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து நீர் தௌpத்து வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான செட்டிநாட்டு வாழைக்காய் மசாலா தயார்.