Visitors have accessed this post 743 times.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்தால் ஆண்மை வாலைப் பிடித்தால் தாழ்மை என்பது தமிழர்களின் கொள்கை அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்களின் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு அந்த விளையாட்டை விளையாடுவதற்கு எந்த தமிழர்களும் அஞ்சுவதில்லை இவ்விளையாட்டில் ஆபத்துகள் நிறையாக இருந்தாலும் தமிழர்கள் சீறி வரும் காளையை பிடிக்கின்றனர் தமிழர்கள் இந்த விளையாட்டை எந்த ஒரு பரிசுகளையும் எதிர்பார்த்து இவ்விளையாட்டை விளையாட வில்லை தமிழர்கள் நம் ரத்தத்தில் கலந்துள்ள வீரத்தை வெளிப்படுத்துவதற்காக ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டை விளையாடுகின்றன இவ்வகையில் தமிழர்கள் தனது காளையை தனது பிள்ளையாக பார்த்துக் கொண்டு வருகின்றார்கள் தமிழர்கள் தனது காளையை விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரும்பொழுது காளைகள் தனது வீரத்தை காட்டுகின்றன காளை மைதானத்திற்குள் வரும்போது மக்கள் ஒவ்வொருவரும் தனது உற்சாகத்தையும் ஆர்வங்களையும் வெளிப்படுத்துகின்றன தமிழர்கள் உழவர் திருநாள் அன்று இவ்விளையாட்டை தமிழகம் முழுவதும் விளையாடி வருகின்றன இவ்விளையாட்டை பார்ப்பதற்காக வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வீர விளையாட்டை பார்ப்பதற்கு மக்கள் பலர் திரண்டு வருகின்றனர் நம் முன்னோர்கள் காளையை ஏறுதழுவதற்கும் விளையாட்டை விளையாடுவதற்கும் இவ்வித காளையை வளர்த்து வருகின்றன ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும் ஜல்லிக்கட்டு தற்பொழுது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள் ஏறுதழுவுதல் மஞ்சுவிரட்டு என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது காளையை அடக்குவதற்கு அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து சீறி வரும் காளையை அடக்க முயல்வார்கள் ஜல்லிக்கட்டு காளை எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் மைதானத்தில் உள்ள அனைத்து மக்களும் உதவுகின்றன அனைவரும் ஒற்றுமையான ஒரு வழியில் இருக்கிறார்கள் போட்டியில் உங்கள் காளை பெரியதா இல்லை எனது காளை பெரியதா என்ற போட்டிகள் வந்தாலும் காளைகளுக்கு பிரச்சனைனா அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள்