Visitors have accessed this post 734 times.
நாளை என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாக கணித்து கூறும் ஒரு கலைதான் ஜோதிடம். ஜோதிடம் என்பது நமது பாரம்பரிய சித்தர்கள் ரிஷிகளால்உருவாக்கப்பட்ட கலையாகும் சூரியன், சந்திரன் ,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ,சனி இவர்களோடு நிழல் கிரகங்களான ராகு கேது ,இவைகள்நிற்கும் தலா3நட்சத்திரங்கள்(3×9=27) .நவகிரகங்கள் சுற்றி வரும் ராசி மண்டலத்தை12 ராசிகளாகப்பிரித்து அவைகளின்சஞ்சாரம் நிலைகளின் அடிப்படையில் பலன்களை கூறும் முறையே ஜோதிடம் ஆகும் நாம் பிறக்கும் போது நவகிரகங்கள் ராசி மண்டலங்களில் அமைந்துள்ள நிலைகளை கணித்து எழுதப்படுவது ஜாதகம் ஆகும் ஜோதிடப் பலன்கள் காணும் முறைகள் பராசர முறை பிருகு நந்தி நாடி பிரசன்னம் பஞ்சபட்சி வாஸ்து என் கணிதம்..,,
சந்திரன் ஒருவ்வொருநாளும் ஒரு முழு நட்சத்திரத்தில்பயணம் வருகிறது. நாம் பிறக்கும் நாளில் சந்திரன் நின்ற நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் எனப்படும்.
மொத்த நட்சத்திரம் 27 ஒரு நட்சத்திரம் 4 பாதங்கள் உள்ளது மொத்தம்108 பாதங்கள் ஆகும் 1ராசியில்9 பாதங்கள் வீதம் இரண்டேகால் நட்சத்திரங்கள் அடங்கும்.
நாம் பிறக்கும் தினத்தில் சந்திரன் பயணம் செய்யும் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் எனப்படும் ந சந்திரன் நின்ற ராசி ஜென்ம ராசி எனப்படும். இதன் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் என்னும் ராசி பலன்கள் கூறப்படுகிறது.
நாம் பிறக்கும் நேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் ராசியே லக்கணம் எனப்படும்.
இதன் அடிப்படையில் ஜாதக பலன்கள் கூறப்படுகிறது.
நம் முன்னோர்கள் மனிதனின் வாழ்க்கையை 120 ஆண்டு காலமாக நிர்ணயித்து ஒன்பது கிரகங்களின் ஆளுமை காலங்களை விகிதம் போட்டு பிரித்துள்ளனர்.இவைகள்திசைகள் எனப்படும்.
ஒவ்வொரு கிரகத்தின் திசைகளையும் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு புத்திகள் என்று அழைக்கப்படுகிறது.
திசா புத்திகளின்டிப்படையிலேயே நமது எதிர்கால வாழ்க்கையை கணித்து கூறப்படுகிறது.