Visitors have accessed this post 731 times.

தனிமை பேசும் மொழி

Visitors have accessed this post 731 times.

பகுதி 3

       அந்த நாள் இரவை நோக்கி செல்லும் தருணம்.ராமு,ஏய்! சீனு எங்க மதிய நேரம் வெளிய போன நண்பர்களா பக்க இன்னும் வரலா இதுதான் நீ பிள்ளையா பார்த்துக்கிற லட்சணமா, என்று மனைவியை ஒரு மிரட்டலுடன் குரல் உயர்த்தினான்.ஆமா! எங்கிட்ட சொல்லிட்டு தான் உங்க பையன் எல்லாம் செய்றான் பாருங்க சும்மா இருங்க! இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது சீனு அப்பா இங்க வாங்க வேகமா என்று சீனு எழுப்பும் அதிர்ச்சி குரல்ஒலி இராமுவை சற்று படபடத்தது அப்பா இங்க இந்த தாத்தா ஏதோ பண்றாங்க உடனே இராமுவும் அவனின் மனைவியும் வெளியே வந்து பார்க்க கோவிலில் சக்கரைப்பொங்கலுக்கு வரிசையில் கைகள் ஏந்தி காத்து கிடந்த அந்தபிச்சைக்கார முதியவர்,இராமுவின் திண்ணை ஓரத்தில் சென்று கொண்டு இருந்த எறும்பு கூட்டத்திற்கு தான் வாங்கிய சக்கரைப்பொங்கலை பிரித்து சிறிது சிறிதாக வைத்து கொண்டு இருந்தார்,உடனே இராமு முதியவரை பார்த்து உணவு எதாவது வேணுமா என்று கேட்க! இல்ல வேண்டாம் இங்கு உணவு சேகரிக்க உழைத்து கொண்டு இருக்கும் இவைகளுக்கு உணவிடவே வந்தேன் இனி கவலை இல்லாமல் சேமித்துக்கொள்ளும் என்று சொல்லி அவ்விடத்தில் இருந்து சென்றார். இராமு அந்த எறும்பு கூட்டத்தை பார்த்தபடி நிற்க இராமுவின் மனைவி இங்க பாரு சீனு இனிமே வெளிய நண்பர்களை பக்க போன வேகமாவே வீட்டுக்கு வந்துடனும் இன்னும் கொஞ்ச நாட்களா தங்கச்சி பாப்பா வந்துருவா என்று கணவனின் காதுகளில் கேட்கும் வண்ணம் ஆனந்த குரல் எழுப்பினால் திண்ணையில் எறும்பு கூட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்த இராமு உடனே என்ன சொன்ன என்று தன் மனைவியை பார்த்து சந்தோஷம் அடைந்தான்.இராமுவும், திலகவதிவும் உள்ளே செல்ல சீனு திண்ணையில் நாணயங்கள் கிடப்பதை பார்த்து எடுத்துக்கொண்டு அப்பா இந்தங்க வெளிய எறும்புக்கு வைச்ச பொங்கல் பக்கம் போட்டிங்க என்று 4 ரூபாயை இராமுவிடம் தர! உடனே அந்த 4 ரூபாயை வாங்கிக்கொண்டு வெளியே சென்று பார்கிறான் யாரும் இல்லை கீழே உணவு சேமித்து கொண்டு இருந்த எறும்பை பார்த்தான் புரிந்தது.இது முதியவரின் பணம் என்று. பணத்தை இறுக்கி பிடித்தபடி சுவரில் சாய்ந்து நின்றான்.

தொடரும்.

முதியவர் எதற்காக உதவி செய்தார் அல்லது தவறுதலாக விடப்பட்ட நாணயமா? அந்த நாணயம் இராமுவிற்க்கு பயன்படுமா?

விரைவில் பகுதி4..,

1 thought on “தனிமை பேசும் மொழி

Leave a Comment

Write and Earn with Pazhagalaam