Visitors have accessed this post 776 times.
எந்த நிலைக்கு வேண்டுமானாலும் போவார்கள். சாதாரணமாக ஒரு ஊசி போட வேண்டும் என்றாலே ஐயோ! அம்மாவென்று கூச்சல் போடும் பெண்கள். அழகு என்று வரும் பொழுது எப்பேர்ப்பட்ட வலியையும் தாங்கி கொள்வார்கள்.
லிப் பிள்ளர்ஸ் என்று ஒன்று உள்ளது. இதில் என்ன செய்வார்கள் என்றால் சில கோலேகன் போன்ற பிள்ளர்ஸை சிரஞ்சியில் வைத்து உதட்டில் போடுவார்கள். பார்ப்பதற்கே வலி மிகுந்த இந்த செயல்முறையை பெண்கள் செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் உதடு சற்று சதைப்பற்றுடன் அழகாக தெரியுமாம். அதுக்காக தான். இதனுடைய விலையும் அதிகம் தான். இந்தியாவில் இந்த செயல்முறையை செய்ய இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஆகுமாம்.
இப்படி நிறைய இருக்கிறது. பிளேஸ்டிக் சர்ஜரி, லிப்போ சக்ஷன் போன்ற நிறைய வலி மிகுந்த செயல்முறைகளை பெண்கள் அழகுக்காக செய்து கொள்கிறார்கள்.
அவ்வளவு ஏன் சாதாரணமாக பெண்கள் வலியை தாங்கி கொண்டு அழகுக்காக செய்து கொள்வது புருவம் எடுப்பது. இதை செய்து கொண்ட பெண்களுக்கு தெரியும் எப்படி வலிக்கும்னு. ஒவ்வொரு புருவமாக பிடிங்கி எடுப்பாங்க.
இன்னொரு வலி மிகுந்த செயல்முறை வேக்ஸிங். காலிலோ கையிலோ இருக்கும் முடிகளை நீக்க வேக்ஸை போட்டுவிட்டு காய்ந்த பின் சர்ன்னு ஒரே இழு தான். பாதி உயிர் போயிடும். இருந்தாலும் பெண்கள் அழகுக்காக செய்து கொண்டுதான் இருக்காங்க