Visitors have accessed this post 775 times.
தாயின் அன்பு:
தாய் என்பவள் தன்னுடைய குழந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிறார். தாய் தன்னுடைய குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து பல பிரச்சனைகளைத் தாண்டி அக்குழந்தையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்கிறார் . மனதில் பல வழிகள் இருந்தாலும் முகத்தில் புன்னகையை காட்டுகிறாள் தன் குழந்தை ஒரு போதும் வாடி விடக் கூடாது என்று நினைத்து . தான் ஒரு நேரம் உண்டு தன் குழந்தைக்கு மூன்று நேரம் பசியாற்ற கின்றார் இக்கட்டான சூழலில் கூட தன்னுடைய குழந்தையின் முகத்தில் வரும் புன்னகையை பார்த்து அனைத்தையும் மறந்து விடுவார். தாய் உணவு உண்டும் உண்ணாமலும் உறங்கியும் உறங்காமலும் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வளர்க்கின்றார். குழந்தையின் அழுகுரல் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி சென்று கட்டிப் பிடித்து அணைத்து கொள்கிறார். குழந்தையை தாயிடம் இருந்து உடலாலும் உணர்வாலும் பிரிக்க முடியாது . குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு மிகவும் வலிமை வாய்ந்தது. தாயினுடைய அன்பு கடலினும் பெரியது அதை யாராலும் அறிந்துகொள்ள முடியாது.
தாய் தன்னுடைய குழந்தையை சிறிது நேரம் பார்க்காவிட்டாலும் தன்னிடமிருந்த எதையோ இழந்தது போல் உணர்கிறாள். குழந்தையின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருப்பது தாய்தான் .
தாய் தன்னுடைய குழந்தைக்கு 50 வயது ஆனாலும் தனக்கு அவர்கள் குழந்தை என்றே பார்க்கின்றார்கள். தன்னுடைய குழந்தையை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் . குழந்தைகள் மீது இருக்கும் அன்பு ஒருபோதும் குறைவதில்லை. தாய் தன்னுடைய குழந்தையை ஒருபோதும் வெறுப்பதில்லை. தாய் தனது குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் வலியை விட தன்னுடைய குழந்தையின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற மகிழ்ச்சிதான் அவள் முகத்தில் தெரியும் தாய் என்பவர் மிகவும் சிறந்தவர் .
தாய் இருக்கும் போது ஏற்படும் வலியை விட தாய் இல்லாத போது ஏற்படும் வலியை பல மடங்காக இருக்கும் அப்பொழுது நீங்கள் தேடினாலும் அவர்கள் கிடைக்க மாட்டார்கள் இறுதியில் உங்களுக்கு கிடைப்பது கண்ணீர் துளிகள் மட்டுமே அந்தக் கண்ணீர்த் துளியை பார்த்தால் கூட தாயின் உள்ளம் நொறுங்கி விடும் அந்தக் கண்ணீரை துடைக்கும் முதல் கை உன்னுடைய தாயினுடைய கையாகவே இருக்கும். அப்பாவும் ஒரு வகையான தாய்தான் தாய் தன்னுடைய குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கின்றார். ஆனால் தந்தையோ தன் குழந்தையை வாழ்நாள் முழுதும் தன் தோள்மீதும் மனதிலும் சுமக்கின்றார்.