Visitors have accessed this post 755 times.
நண்டு கிரேவி
தேவையான பொருட்கள்:
பொருள் – அளவு
நண்டுஅரை கிலோ
சீரகம்அரை டீஸ்பூன்
பொpய வெங்காயம்2
தக்காளி2
காய்ந்த மிளகாய்4
இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
சில்லி பவுடர்1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள்3 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தழை1 கைப்பிடி
கறிவேப்பிலை1 கொத்து
தேங்காய் துருவல்அரை கப்
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
நண்டை நன்கு சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் அலசி வைக்கவும். பின்பு 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். நண்டு 10 நிமிடத்தில் வெந்து தண்ணீர் வற்றியவுடன் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பொpய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் காய விடவும். சீரகம், கறிவேப்பிலை போடவும். பொரிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு சில்லி பவுடர், மல்லித்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து வேகவைத்த நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் கழித்து, அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
கொதித்து மசாலா வாடை அடங்கியவுடன், கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான நண்டு கிரேவி ரெடி.
மேலும் பல நான்வெஜி உணவுகள் உள்ளன கமெண்ட்ஸ் பண்ணுங்க நண்பர்களே நிறைய பதிவுகள் வர உள்ளன