Visitors have accessed this post 755 times.

நண்பன்

Visitors have accessed this post 755 times.

நண்பன் 

ஒரு சிறந்த நண்பன் இருந்தால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் அதுவே அவன்  தவறான நண்பனாக இருந்தால் உலகில் நம்மால் நம்மை உயர்த்திக்கொள்ள முடியாது நம்மை பல பிரச்சனைகள் சூழ்ந்து விடும் நம்மை பலர் வெறுக்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. 

ஒரு சிறந்த நண்பன் கிடைப்பது வாழ்க்கையில் கிடைத்த பெரிய வரமாகும்.

நண்பன் என்பவன் வெற்றியில் மட்டுமல்ல தோல்வியும் பங்கு கொள்வான்.

எத்தனை பல பிரச்சனைகள் நம்மை சூழ்ந்தாலும் நண்பன் ஒருவன் சொல்லும் வார்த்தையில் அத்தனை பிரச்சனையும் மறந்துவிடும்.

 பெற்றோர்களிடம்  சொல்ல தயங்கும் பிரச்சனைகளை கூட நண்பனிடம் தயங்காமல் சொல்ல முடியும்.

நம்முடன் இருக்கும் நண்பர்கள் நல்லவர்களா அல்லது தவறானவர்களா என்பதை நம்மால் கணக்கிட இயலும்.

தவறான வழியை நோக்கி செல்லும் ஒருவனை சரியான பாதையில் அழைத்துச் செல்வதே சிறந்த நண்பன் மற்றும் தவறான செயல்களில் ஈடுபடும் போது இது தவறு என்று  உணர்த்துவது சிறந்த நண்பனின் குணமாகும். 

மாறாக எந்தத் தவறு செய்தாலும் செய்யட்டும் நானும் உடனே இருப்பேன் என்று சொல்லும் நண்பன் மிகவும் தவறானவன்  அவனை விட்டு விலகி செல்வது மிக சிறந்த ஒன்று . 

நண்பனுக்கு ஏற்படும் அனைத்து தோல்விகளையும் வெற்றியாக மாற்றுவது சிறந்த நண்பனுக்கு உதாரணம். 

நண்பர்களின் தோல்வி தனது தோல்வியாக எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று வழியை அமைத்துக் கொடுக்கிறது சிறந்த நண்பன். 

நண்பனுக்கு ஏற்படும் வெற்றியை தனது வெற்றியாகவும் நண்பனுக்கு ஏற்படும் தோல்வியை தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நண்பன் உலகில் சிறந்தவன் அவ்வாறு ஒரு நண்பன் கிடைத்தால் அது தவிர உலகில் வேறு ஒன்றும் தேவையில்லை. 

இவ்வாறு ஒரு நண்பன் கிடைத்தால் நம்மை சுற்றி பல அன்பான உறவினர்களும் கிடைப்பார்கள்.

பல சரிவு ஏற்பட்டாலும் மனம் தளராமல் மறுபடியும் எழுந்து நிற்க முடியும் ஒரு சிறந்த நண்பன் உடன் இருந்தாள்.

காதலை விட மிக சிறந்தது நட்பு காதல் செய்யாத மனிதர்களே இந்த உலகத்தில் இருந்தாலும் நட்பு இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam