Visitors have accessed this post 790 times.

நன்மை தரும் யோகா

Visitors have accessed this post 790 times.

யோகா

மனதிற்கும் உடலுக்கும் அதிகப்படியான ஒற்றுமை இருக்கிறது ஏதேனும் ஒன்று ஒத்துழைக்காவிட்டால் மற்றொன்று இயங்காது 

 மனது சோர்வடைந்தால் உடலும்  சோர்வாகி விடும் உடல் சோர்வடைந்தால் மனதும் சோர்வாகி விடும் 

உடல் ஆரோக்கியத்திற்கும் மனது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றுதான் யோகா பயிற்சி

யோகா செய்வதினால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது மகிழ்ச்சி கிடைக்கின்றது சோர்வு நீங்குகின்றது 

வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு அமைதி என்ற ஒன்று நமக்கு கண்டிப்பாக தேவை

நமக்குத் தேவையான அமைதியை நாம் யோகா பயிற்சியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

யோகா என்பது நம்முடைய சுவாசம், இதயம், மூளை, நரம்பு உடலில் உள்ள அனைத்து  பகுதிகளிலும் கலந்திருக்கும் 

நாம் யோகாவை எந்த இடங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளமுடியும் அமைதியான சூழல் மட்டும் இருந்தால் போதும்

உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் உள்ளவர்களே உலகத்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆவார் 

மனதில் அமைதி இல்லை என்றால் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும்

உடலில் ஆரோக்கியம் இல்லை என்றால் நமது அன்றாட செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும்

நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் யோகா பயிற்சியை மேற்கொண்டு பல நன்மைகளை பெறலாம்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam