நமது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி?

Visitors have accessed this post 286 times.

ஊர்ல ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார் அவர் வீட்டிலேயே எப்போதும் துக்கம் ஒரு கஷ்டமாக உணர்ந்தால் தன்னுடைய செல்வத்தை எல்லாம் விற்றுவிட்டு கிடைத்த பணத்தை ஒரு சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு அந்த ஊர்ல இருக்கிற ஆற்றங்கரையில் வசிக்கின்ற அந்த சாமியாரை நோக்கி பயணமானார் . சாமியார் கிட்ட போயி அவர் கொண்டு வந்த செல்வத்தை சாக்குமூட்டையை காண்பித்து சாமி எனக்கு எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி உணர்கிறேன் அதனால என்கிட்ட இருந்த செல்வத்தை எல்லாம் வித்துட்டு சாக்குமூட்டையில் பணமா கொண்டு வந்திருக்கேன் நீங்கள்தான் எனக்கு நல்வழி காமிக்கணும் அப்படின்னு சொன்னார் பண மூட்டையை வாங்கின உடனே சாமியார் புடிச்சாரு ஒரு ஓட்டம் செல்வந்தர் ஓட சாமியார் ஒட ஓட்டமுன்னா ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம் சாமியார் யோகாசனம் செஞ்சி பழக்கப்பட்டதால் வேகமாக ஓடினார் அவர் ஓட்டத்துக்கு செல்வேந்தரால ஓட முடியல ஒரு கட்டத்துல செல்வேந்திரர் ஓட முடியாதததால நின்றார்.

இதைப் பார்த்த சாமியார் செல்வந்தருகிட்ட வந்து யாருக்குமே சந்தோஷம் அப்படிங்கிறது மனசுலதான் இருக்கு அத வெளியில தேடாத உன் ஆழ்மனசுல உள்ளொளி அப்படின்னு ஒன்னு இருக்கு அதை தேட முயற்சி செய் என்று சொல்லி உபன்யாசம் செய்தார்.

உடனே இந்த செய்தி ஊர் எல்லாம் பரவிற்று. ஒரே நாளில் அந்த சாமியார் உலக பேமஸ் ஆயிட்டாரு நம்ப சாமியார் புகழ் மன்னர் வரைக்கும் பரவிற்று அந்த நாட்டின் மன்னனும் சாமியாரைப் பார்க்க ஆசை பட்டார் உடனே சாமியாரும் அப்பாயின்மென்ட் கொடுத்தார்

சாமி உங்க கிட்ட நான் ஒரு சில கேள்விகள் கேக்கணும் அப்படின்னு கேட்டார் மன்னர் உடனே சாமியார் கேள் என்று சொன்னார் உடனே மன்னர் சாமி சொர்க்கம்னா என்ன நரகம்ன்னா என்ன? அப்படின்னு சொல்லி கேட்டார் அதற்கு அந்த சாமியார் போடா ங்கொய்யால அப்படி சொல்லி சொல்லி விட்டார் இதனால் கோபப்பட்ட மன்னன் தன் இடையில் உள்ள வாளை எடுத்தார் உடனே சாமியார் இதுதாண்டா நீ கேட்ட நரகம் என்று சொன்னார் உடனே தன் நிலையை உணர்ந்த மன்னர் உருவுன வாளை மீண்டும் இடையில் சொருகினார் உடனே அந்த சாமியார் இதுதான் நீ கேட்ட சொர்க்கம் அப்படின்னு சொன்னார் ஆஹா என்ன ஒரு அற்புதமான விளக்கம் அப்படின்னு சொல்லி சாமியாரை பாராட்டினார் சாமி நான் உங்கள் செயல்களால் ஆனந்தம் அடைந்தேன் ஆகவே நான் உங்களை எப்பொழுது அடுத்தமுறை பார்க்க வரட்டும் அப்படின்னு கேட்டார் அதற்கு சாமியார் “நான்” செத்த பிறகு வா அப்படின்னு சொல்லிட்டார் உடனே என்னையா இந்த ஆள் எப்ப பாத்தாலும் குண்டக்க மண்டக்க சொல்றான் அப்டின்னு கேட்டார். உடனே அந்த சாமியாரின் சீடர் ஒருவர் ஐயா

நான் என்ற அகந்தை உங்கள் மனதைவிட்டு இருந்து ஒழிகிறதோ அன்று வாருங்கள் அப்படிங்கிறார்.

மன்னர் இப்பொழுது சாமி எனக்கு ஒரு உதவி செய்யணும் அதற்கு கேளுன்னார் சாமி என் மகனை உங்களிடம் அனுப்புகின்றேன் அவரை நல்வழிப்படுத்தி நீங்கள் ஆசீர்வதித்தருளனும் அதற்கு சாமியார் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்

அவர் மகனும் சாமியாரிடம் வந்தார் சாமியார் இளவரசன் என்றும் பார்க்காமல் எப்பொழுது பார்த்தாலும் அடித்துக் கொண்டே இருந்தார் பொளேர் பொளேர் என்று அடித்தார். இளவரசன் இப்பொழுது அந்த அடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று சிந்தித்து அதில் தப்பிப்பது எப்படின்னு யோசிச்சி அதுல வெற்றி கண்டார். சில நாள் கழித்து கம்பை எடுத்து எடுத்து அடிக்க ஆரம்பித்தார். கம்பிலும் தன்னை தற்காத்துக் கொண்டார் இளவரசர் சில நாள் கழித்து உன்னை உறக்கத்திலும் வாள் வீசுவேன் கவனமாக இரு என்று சொன்னார். இப்போது தனது கண்கள் தூங்கினாலும் மனதை எப்பொழுதும் விழிப்பாக வைத்துக் கொண்டார் இளவரசர்.

நாமும் அப்படித்தான் கண்கள் உறங்கினாலும் நமது உள்முக பார்வைையை விழிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். நமது சிந்தனை செயல்கள் எல்லாம் முன்னேற்றப் பாதையை நோக்கி எப்பொழுதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்

இதற்கிடையில் மக்கள் அவர்களை நல்வழிப்படுத்த உரையாற்றுமாறு சொன்னார்கள்.

ஒரு ஊர்ல ஒரு ஆற்றின் குறுக்கே சின்ன பாலம் இருந்தது அதன்வழியாக யானைகளும் மிருகங்களும் அதை ஆற்றை கடப்பதற்கு உபயோகப்படுத்திக் கொண்டன. ஒருநாள் அந்த ஆற்றின் வழியில் முக்கால் பங்குக்கு பன்றி கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்து மறுமுனையில் யானை கூட்டம் அப்போதுதான் பாலத்தில் நுழைந்தது பன்றிக் கூட்டம் வருவதை பார்த்த அந்த யானைகளின் தலைவி தன் கூட்டத்தினரை பின்னால் போக பணித்தது யானைகள் எல்லாம் பின்னால் சென்றது

நம் வாழ்க்கையிலும் சில பன்றிகள் வரலாம் நாம்தான் ஒதுங்கி போக வேண்டும்.

கூட்டத்தில் உள்ள ஒரு சின்ன யானை சாதாரண பன்றி அதற்கு நாம் பின் வாங்குவதா என்று கேலி செய்தது. அதற்கு தலைவி யானை சேறு சகதி நம் காலில் பட்டாலும் அல்லது நாம் சேற்றில் மிதித்தாலும் பாதகம் என்னவோ நமக்குத்தான் என்று சொன்னதும் உடனே ஆஹா நம் தலைவி எப்படிப்பட்ட ஒரு அருமையான தலைவி என்று பாராட்டியது இந்தப் பாராட்டால் உச்சி குளிர்ந்த அந்த தலைமை யானைக்கு தலைக்கணம் ஏறியது

எந்தக் கட்டத்திலும் நமக்கு தலைக்கனம் மட்டும் கூடவே கூடாது

இதனை கண்ட கடவுள் யானையின் காதில் ஓர் எறும்பை போட்டார் இதனால் யானை அங்கும் இங்கும் ஓடியது உடனே மீண்டும் அந்த குட்டியானை தலைவி அந்தத் தண்ணீரில் மூழ்கினால் எறும்பு செத்து விடப்போகிறது என்று சொன்னது உடனே நமது யானையும் தண்ணீரில் மூழ்கிய உடன் எறும்பு இறந்து போனது இதனைக்கண்ட தண்ணீருக்கு ஆணவம் தலைக்கு ஏறியது யானையோ எறும்போ நான் இல்லாமல் இந்த உலகே இல்லை என்று சொன்னது இதனைக்கண்ட சூரியபகவான் தன் ஒளியால் அந்த தண்ணீரை வறண்டுபோகச் செய்தார்.

இறைவனே நம்மை விட எல்லா விதத்திலும் மேலானவன் என்பதை மறக்கக்கூடாது அப்படின்னு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்

இதற்கிடையில அவர் வசித்து வந்த ஆற்றங்கரையில் மறுபக்கத்தில் ஒரு விலைமாது வசித்து வந்தாள் அவளும் சாமியாரின் போதனையை கேள்விப்பட்டு சாமியாரிடம் வந்து சாமி எனக்கும் சில நல்ல வார்த்தை சொல்லுங்கள் என்று சொல்லி கேட்டாள் அதற்கு அந்த சாமியார் ஒரு விலைமாது என் புனிதமான இடத்திற்கு வந்து என்னைத் தீண்டத்தகாதவர்களாக மாற்றுவதா சீச்சீ போ போ என்று கூறிவிட்டார் அங்கே அருகில் உள்ள சீடரை பார்த்து இவள் வீட்டுக்கு யார் யார் வருகின்றார்கள் என்று கவனித்துக் கொள் என்று சொன்னார். ஒரு நாள் அந்த ஆற்றில் மாபெரும் வெள்ளம் வந்து நமது சாமியார் கூட்டத்தினரை எந்த விளைவையும் அடித்துக் கொண்டு சென்றது இதனால் அனைவரும் மரணம் அடைந்தனர் மரணமடைந்த அனைவரும் தேவலோகம் சென்றனர் தேவலோகத்தில் சித்திரகுப்தன் முன்னால் நின்றபோது தேவதாசியைப் பார்த்து நீ சொர்க்கத்துக்கு போ அப்படின்னு சொன்னார் அதற்கு அடுத்தபடியாக நின்ற சாமியாரைப் பார்த்து நீ நரகத்திற்கு போ என்றார் உடனே நம் சாமியார் ஒரு விலைமாதுவிற்கு சொர்க்கம் எனக்கு நரகமா என்று கேட்டார் அதற்கு சித்திரகுப்தர் அவை தேவதாசியாக இருந்தாலும் இறைவனை நினைத்து அடுத்தவருக்கு தீங்கு இழைக்காமல் மனம் நொந்து மனதார துதித்தாள் ஆனால் நீயோ அவள் போன்ற ஒரு மனம் நொந்த மனிதர்களை நல்வழிப்படுத்தாமல் தலைக்கனம் ஏறி கர்வம் கொண்டாய் ஆதலால் உனக்கு கிடையாது சொர்க்கம் என்று கூறிவிட்டார்

நாம செய்ற வேலை சமூகத்தால் எவ்வளவு கேவலமாக எண்ணப்பட்டாலும் மனமுவந்து முழு அர்ப்பணிப்போடு வேலை செஞ்சா சொர்க்கமும் நமக்குக் கிட்டும்.

கிரிக்கெட் அப்டிங்கிறது நம்ம வாழ்க்கை அப்டின்னு எடுத்துக்கிட்டா முயற்சியின்மை அப்படிங்கிற ஒன்றுதான் எதிர் அணி கேப்டன் ஏன் அப்டின்னா நம்மை அவுட் ஆக்குவது அவருடைய இலக்கு அம்பயர் என்பது கடவுள் அப்படின்னு வச்சுக்கலாம் எதிர் அணி வீரர்கள் நம்மை தோற்கடிக்க காத்திருக்கும் எதிரிகள். இதுல போடப்படுகின்ற ஒவ்வொரு பந்தும் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் நீங்கள் சிக்ஸர் அடிக்கின்றீர்களா அல்லது அவுட் ஆவீர்களா என்பது உங்கள் கையில் தான் இருக்கின்றது இதில் நீங்கள் சிக்சர் அடித்தாலும் கைதட்டும் அவுட் ஆனாலும் ஆர்ப்பரிக்கும். இதுதான் உலகம் ஏன் சமயத்தில் உங்களுடைய சக வீரன் உங்களை ரன் அவுட் ஆக்க கூட முயற்சி செய்யலாம்.இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது

நல்லவர்ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam