Visitors have accessed this post 129 times.
கணினித்திரையில் வெளியே நின்றவனின் முகத்தை பெரிதாக்கிப் பார்த்த வீரராகவன் ‘இவன் தான காலைல வாசல்ல நின்னு ஒரு பொண்ண கத்தி கூப்டுட்டு இருந்தா அப்படினா இவே வித்தியாவ தா கூப்ட்ருக்கா’ என்று தனக்குள்ளே கேள்வியையும் பதிலையும் கூறிக் கொண்டவன்.
இடைநிலை செய்தித் தொடர்பு தொலைபேசியை எடுத்து நித்யாவின் அருகில் இருந்த தொலைபேசிக்கு அழைத்தான் அதை எடுத்தவள் “டிசைனிங் செக்ஷன் லோகோ டிசைனர் வித்யா ஹியர்” என்று குரல் தொய்வுற்ற நிலையில் பேசினாள். அவள் குரலை வைத்து அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டவன் “இப்போ நீ என்ன வேல பண்ணீட்டு இருக்கியோ அத அப்படியே விட்டுட்டு ஏ ரூமுக்கு வா” இந்த அதிகாரம் நிறைந்த தன்னுடைய மரியாதையை குறைத்து ஆணையிடும் குரலை கேட்டவுடன் “இருக்குற டென்ஷன்ல இவே வேற” என்று எரிச்சல் அடைந்து தொலைபேசியை டொக் என வைத்துவிட்டு எழுந்து அவனுடைய அறையை நோக்கி வந்தாள்.
அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவளிடம் “என்ன மிஸ் வித்யா உங்கள பாக்காம போக மாட்டேன்னு ஆபிஸ் வாசல்ல நின்னு ஒருத்தர் ஆர்ப்பாட்டோ பண்ணிட்டு இருக்காரு நீங்க என்னடான்னா போமாட்டேனு அடம் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க” ஏற்கனவே உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தவளுக்கு இவனுடைய கேள்வி மேலும் தூபம் போட்டது போல் ஆகி விட “அந்த ஆளு யாருன்னே எனக்குத் தெரியாது” என்று நிமிர்ந்து அவனுடைய கண்களை நேராகப் பார்த்து கூறினாள்.
அவளுடைய சிவந்த கண்கள் அவனுக்கு எதையோ உணர்த்த “அந்தாள் இப்போ இங்க இருந்து போகலன்னா போலீச வர சொல்லி ஜெயில்ல தள்ளிருவேன்னு சொல்லுங்க” என்று ஆவேசமாக பாதுகாவலரைப் பார்த்து கூற அவன் கோபத்தை உணர்ந்து கொண்ட பாதுகாவலரும் வேக நடையிட்டு வெளியே சென்றார்.
வெளியே செல்ல திரும்பிய வித்யாவிடம் “யாரு அவே ? ஓ பாய் பிரண்டா? இல்ல எக்ஸ் லவ்வரா? ” என்று அவன் கேட்க சடாரென திரும்பியவள் அவன் அருகில் சென்று மேஜையில் கை வைத்து அவன் முகத்திற்கு நேராக தன் முகத்தை குனிந்தவள் “அவே எனக்கு யாராயிருந்தா ஒனக்கென்ன? ” என அழுத்தமாக கேட்க அனல் பறக்கும் அவள் விழிகளைக் கண்டவன் சற்று ஆடித்தான் போனான்.
“ஒனக்கு போய் ஹெல்ப் பண்ணே பாரு என்ன சொல்லணு” , “ஒன்ன நா ஹெல்ப் பண்ண சொன்னனா?” என்று கோபமாக கத்திவிட்டு வாசலை நோக்கி நடந்தாள். “ராட்சசி இவளுக்கு போய் ஹெல்ப் பண்ணே பாரு என்ன சொல்லணு” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன் அவள் இன்னும் வெளியே செல்லாமல் கதவருகே நிற்பதைக் கண்டு ‘என்னாச்சு இந்த பைத்தியத்துக்கு வெளியே போகாம இங்கயே நிக்கிது? ‘ என மனதுக்குள் நினைத்தவன்.
“என்ன மேடம் சாட்டைம் மெமரி லாஸ் ஆயிடுச்சா? ” மெதுவாக அவனை நோக்கி திரும்பியவள் திரு திருவென விழித்தாள். அந்தக் கண்களில் கோபம் நீங்கி தற்போது பயம் குடி கொண்டிருந்தது. “என்ன? ” , “டோர்ல பல்லி” என்று சிறு குழந்தை போல் பயந்து கொண்டு பல்லியை நோக்கி விரலை நீட்டினாள்.
இதைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டே தன்னுடைய மேஜையில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து அதை சுருட்டி அந்த பல்லியின் மேல் வீசினான். அது பயந்து கொண்டு வேறு இடத்திற்கு ஓட இவளும் பயத்தில் இரண்டு அடி பின்னால் குதித்தாள். இந்த காட்சியைப் பார்த்து சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான் அவன். சிரிப்பவனை திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு கதவைத் திறந்து வெளியே சென்றாள் அவள்.
சிரித்துக் கொண்டிருந்தவன் மேல் கூரையில் ஒட்டி இருந்த பல்லியைப் பார்த்து “இத்துனூண்டு இருக்க ஒன்ன பாத்து பயப்படுறவ இவ்ளோ பெருசா இருக்க என்ன பாத்து பயப்பட மாட்டேங்குற” என்று தனக்குத் தானே நொந்து கொண்டான்.
தன்னுடைய இடத்திற்கு வந்தவள் நிம்மதியாக தன்னுடைய பணியை பார்க்கத் தொடங்கினாள். உள்ளே செல்லும்போது கலவரத்துடன் சென்றவள் இப்போது கன்று குட்டியைப் போல் அமைதியாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து சுமதி “பயந்துகிட்டே போன இப்போ பவ்யமா வேல பாத்துட்டு இருக்க உள்ள என்ன நடந்துச்சு? ” என்று ஆர்வத்துடன் விசாரித்தாள்.
“அவே அங்கயிருந்து போலன்னா போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்னு எம்.டி செக்யூரிட்டி கிட்ட மிரட்டி அனுப்ப சொன்னாரு” , “நெனச்சே, நாந்தா சொன்னேன்ல எம்.டி ரொம்ப நல்லவர்னு ஒனக்கு எப்டி ஹெல்ப் பண்ணிருக்காரு பாத்தியா? ” , “நல்லவர் தா ஆனா வாய் தா கொஞ்சோ ஜாஸ்தி” , “ஓ வாய்க்கு மேலயா? ஒனக்கு போய் ஹெல்ப் பண்ணி இருக்காரு பாரு பாவோ அந்த மனுஷே” .
“யாரு அந்தாள் பாவமா? அவன போய் ஏ பாய் பிரண்டா இல்ல எக்ஸ்லவ்வரானு கேக்குறாரு” , “ரெண்டூ இல்ல என்னோட ஃபாலோவர்னு சொல்ல வேண்டியது தான” என்று சுமதி வாசுவை கேலி செய்ய தோழிகள் இருவரும் வாய் விட்டு சிரித்துக் கொண்டனர்.
வேலை நேரம் முடிந்த பின் விடுதிக்கு செல்ல சுமதி உடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வித்யாவை ஒரு கை பலமாக இடது பக்கம் இழுத்தது. தன் கையை பிடித்து இப்படி இழுப்பவர் யார் எனத் தெரிந்து கொள்ள திரும்பியவள் வாசுவின் முகத்தைப் பார்த்தவுடன் துணுக்குற்றாள்.
“காலைல வேணுனா நீ ஏ கிட்டருந்து தப்பிச்சிருக்கலா ஆனா இப்போ எப்படி தப்பிக்கிறன்னு நானூ பாக்குறே” , “சொன்னா கேளு ஏ கையவிடு” , “விட முடியாது வா ஏ கூட” , “ஏ கைய விட்டரா” என்று வித்யா அலற ஆரம்பிக்க வாசு அவளை வலுக்கட்டாயமாக இழுக்க ஆரம்பித்தான்.
சுமதி வேகமாக அலுவலகத்திற்குள் சென்று வீரராகவனிடம் வெளியே நடப்பதைக் கூற அவன் வேகமாக வெளியே ஓடி வந்தான். இங்கே வாசு வித்யாவின் இடது கையைப் பிடித்து அவனுடைய மகிழுந்தின் அருகே இழுத்துச் சென்று கொண்டிருந்தான்.
சட்டென வித்யாவின் வலது கையைப் பிடித்து வீரராகவன் அவன் பக்கமாக இழுக்க அவனுடைய பலமான இலுப்பில் அவன் மேலே இடித்தவளின் தோள்பட்டையை பிடித்து தன் பக்கத்தில் நிற்கவைத்தான்.
வீரராகவனுடைய செய்கையால் கோபமடைந்த வாசு “இங்க பாரு ஆபீஸ்க்குள்ள இருக்குற வரைக்குந் தா அவ உன்னோட ஸ்டாப் இப்பதா வெளிய வந்துட்டால்ல இனி அவளுக்கூ ஒனக்கூ எந்த விதமான சம்பந்தமூ இல்ல மரியாதையா ஏ விஷயத்துல தலையிடாம போய்ரு” .
கோபக்காரன் ஆன இவன் வாசு சொல்வதைக் கேட்டு தன்னை நிற்கதியாக இப்படியே விட்டு விட்டுச் சென்று விடுவானோ என்ற பயத்தில் வித்யாவின் அடிவயிற்றில் பயம் கவ்வ ஆரம்பித்து.