Visitors have accessed this post 122 times.
பாகம் 16
“என்னோட ஸ்டாஃப்ஸ் எல்லாரு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு பத்ரமா போற வரைக்கூ எம்.டிங்குற வகையில எனக்கூ அங்களுக்கூ சம்பந்தோ இருக்கு அதே மாதிரி இவங்களூ இவங்க வீட்டுக்கு பத்ரமா போற வரைக்கூ எனக்கூ இவங்களுக்கூ சம்பந்தோ இருக்கு” என்று நிதானமாக வாசுவிற்கு பதில் கூறினான் வீரராகவன்.
“நா யாருன்னு தெரியாம நீ ஏ கிட்ட மோதீட்டு இருக்க ஒழுங்கா இத கண்டுக்காம போயிரு” , “நீ யாரா இருந்தா எனக்கென்ன? நீ இப்போ இங்க இருந்து போலன்னா நா கமிஷ்னர கூப்டுவே” .
“கமிஷனர கூப்டுவியா? தாராளமா கூப்டு அவர் வந்தா என்னோட வேல ஈஸியா முடிஞ்சிரு நா யாருன்னு தெரியுமா ஒனக்கு? ” என்று வாசு எகத்தாளமாக பேச தன்னுடைய அலைபேசியை எடுத்து காவல்துறை ஆணையரை அழைத்தான்.
நடப்பதை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வாசு மகிழுந்தின் ஓட்டுநர் அருகில் சென்று நின்றான். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த இரண்டு காவலர்கள் அங்கே நிற்கும் வாசுவைக் கண்டதும் அவனுக்கு சல்யூட் அடித்தனர்.
“என்ன சார் நல்லா இருக்கீங்களா? அப்பா நல்லா இருக்காரா? நீங்க ஏ இங்க நிக்கிறிங்க ஏதாவது பிரச்சனையா? ” என்று அதில் ஒரு காவலர் வாசுவிடம் விசாரிக்க “எனக்கெல்லா எந்த பிரச்சனையு இல்ல ஏட்டு, அதோ அங்க நிக்கிறா பாரு அவந்தா ஏ கிட்ட பிரச்சன பண்ணீட்டு இருக்கா” என்று வீரராகவனை சுட்டிக்காட்டினான்.
அந்த காவலர் வீரராகவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு “நீ போய் அவர்கிட்ட என்ன விஷயோனு விசாரிச்சிட்டு வா” என்று இன்னொரு காவலரை ஏவி விட்டார். வீரராகவனிடம் வந்த அந்த காவலர் “என்ன சார் பிரச்சன? ” என்று விசாரிக்க ஆரம்பித்தார்.
“இங்க பிரச்சனயே அவந்தா நீங்க என்னடான்னா அவே கிட்ட போய் நலோ விசாரிச்சிட்டு இருக்கீங்க , அவே இந்தப் பொண்ண பலவந்தமா கடத்தீட்டு போகப் பாத்தா” என்று பக்கத்தில் நின்ற வித்தியாவை கை காட்டினான். “சார் அவரு இந்த ஏரியா கவுன்சிலரோட பையே எங்க டிபார்ட்மெண்ட்ல கமிஷனர் உள்பட எல்லாருமே அவங்க அப்பாக்குதா சப்போர்ட் பண்ணுவாங்க என்னால இவங்கள மீறி எதுவு பண்ண முடியாது சார்” , “அப்ப நீங்க எதுவு பண்ண வேண்டா நா பண்றத கம்முனு வேடிக்க மட்டூ பாருங்க” என்று ஒரு தீர்மானத்தோடு கூறியவன் ராமு என்று தன்னுடைய உதவியாளரை சத்தமாக அழைத்தான்.
கதவருகே நின்று கொண்டிருந்த ராமு வேகமாக அவனிடம் ஓடி வந்தார். அவரிடம் எதையோ கூறிவிட்டு வித்யாவைப் பார்த்து “போலாமா? ” என்றான். அவன் எதற்கு இப்படி கேட்கிறான் என்று புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றாலும் சரி என தலையாட்டினாள் வித்யா.
மகிழுந்தின் பின்னால் கதவை திறந்து விட்டு அவன் வித்தியாவைப் பார்க்க அவனுடைய செய்கையை புரிந்து கொண்டவள் அமைதியாக உள்ளே அமர்ந்தாள். அவன் மகிழுந்தை இயக்கி அங்கிருந்து புறப்பட்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத வாசு என்ன செய்வது எனத் தெரியாமல் கோபத்தில் மகிழுந்தின் மேல் கூரையில் தன்னுடைய கையால் பலமாக ஒரு குத்து குத்தினான்.
பயணத்தில் மௌனமாக தலையை கவிழ்ந்தபடி பின்னால் அமர்ந்திருந்த வித்யாவை கண்ணாடி வழியாக பார்த்தவன். சில வினாடிகளுக்குப் பிறகு “ஏ கிட்ட மட்டூ நல்லா கத்தி கத்தி சண்ட போடத் தெரியிதுல்ல அத்தன பேர் முன்னாடி கைய புடிச்சு இழுக்குறவே கன்னத்துல ரெண்டு பளார் பளார்னு கொடுக்கத் தெரியாதா ஒனக்கு? ” என்று கோபமாக கத்தினான்.
“வாயில பேசுறவனா இருந்தா பதிலுக்கு பதில் பேசி சமாளிச்சுரலா , பப்ளிக்ல திடீர்னு மேல கை வக்கிறவன என்னால என்ன பண்ண முடியூ? ” என்று முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினாள். அவளுடைய படபடப்பான பேச்சிலேயே அவள் மிகவும் பயந்து இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்தவன். அவள் எப்பொழுதும் சாலையை கடக்கும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு “இங்கருந்து வீட்டுக்கு நடந்து போயிருவியா? இல்ல நா கொண்டு வந்து விடட்டுமா? ” என்று கேட்க அப்பொழுதுதான் இது விடுதிக்குச் செல்ல சாலையை கடக்கும் இடம் என்பதை கண்ணாடியின் வழியாக பார்த்து புரிந்து கொண்டவள் “நானே போயிருவே” என்று வாடிய முகத்துடன் கூறினாள்.
“வீட்டுக்கு வந்து விடனும்னா சொல்லு கொண்டு வந்து விட்றே” , “இல்ல நா போய்க்கிறே” , “ஏ அந்த ஸ்கூல் பொண்ண கூட்டீட்டு போணுமா? ” இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று மகிழுந்தை விட்டு கீழே இறங்கியவள் அவனை திரும்பிப் பார்க்க அவன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எப்பொழுதும் அவளிடம் கோபத்தை கக்கும் அவனுடைய விழிகள் இன்று ஏனோ அலை ஓய்ந்த கடல் போல் அமைதியாக இருந்து. திடீரென கேட்ட “அக்கா!” என்ற குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க அங்கே சாலையின் மறுபுறத்தில் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த பள்ளிச்சிறுமி இவளைப் பார்த்து கையசைத்தாள்.
“சரி நா வரே” என்று கூறிவிட்டு வேகமாக சாலையைக் கடந்து அந்தச் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வழக்கமாக செல்லும் சந்திற்குள் நுழைந்தாள் வித்யா. இதை சாலையின் மறுபுறத்தில் இருந்து பார்த்துவிட்டு மீண்டும் தன்னுடைய அலுவலகம் நோக்கி விரைந்தான் வீரராகவன்.
உறங்குவதற்காக கண்களை மூடி படுத்தவனின் மணக்கண்ணில் ‘பப்ளிக்ல திடீர்னு மேல கை வக்கிறவன என்னால என்ன பண்ண முடியூ? ‘ என்று கண்களில் தேங்கி நின்ற கண்ணீருடன் வித்யா கூறிய காட்சி தெரிந்தது.
‘வேல இல்லன்னு சொன்னவுடனே எவ்ளோ தைரியமா எதுத்து பேசுன பொண்ணு தாமேல ஒருத்தே கைவச்ச உடனே துடிச்சு போயிட்டாளே இவ என்ன ரகம்னே புரிஞ்சுக்க முடியலையே? ‘ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
விடுதியின் அறையில் படுத்து மேற்கூறையை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் எப்பொழுதும் தன்னிடம் சண்டையிடும் அவன் இன்று தனக்கு உதவியதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் தன்னிடம் எப்போதும் கோபத்தைக் காட்டும் அவனுடைய விழிகள் இன்று சாந்தமாய் இருந்ததை எண்ணி கோபப்படாம அமைதியா இருக்கும்போது உண்மைலே அவே ரொம்ப நல்ல மனுசனா இருக்கா” என்று அவனை பாராட்டினாள்.
“எவே நல்ல மனுசனா இருக்கா? ” என்று பக்கத்தில் படித்திருந்தவள் தூக்க கலக்கத்தில் கேட்க “அய்யய்யோ! சத்தமா சொல்லிட்டனா” என்று விரல்களை குலுக்கியவள் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு அமைதியாக படுத்தாள்.