Visitors have accessed this post 673 times.

பகவத் கீதை காட்டும் நல்ல வழிகள்

Visitors have accessed this post 673 times.

பகவத் கீதை காட்டும் நல்ல வழிகள்

வாழ்க்கையில் மான அவமானங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள் மனதை தடுமாறச் செய்யும் கால சூழ்நிலைகள் நம்பிக்கை துரோகங்கள் செய்யும் செயல் திட்டங்களும் சூழ்ச்சிகளும் எதிர்பார்ப்புகள் உறவினர் மற்றும் நண்பர்களின் சூது அன்பின் இழப்புகள் இவைகள் எல்லாம் மனித வாழ்க்கையில் அன்றாடம் தொடரும் நிகழ்வுகள்தான்

இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் எவனோ அவனே மிகச்சிறந்த பலம் பொருந்திய வெற்றியாளனாக உருவாகிறான்
எத்தனை துன்பம் வந்தபோதும் மனசே மருந்து என்பதை உணர வேண்டும்
குறிப்பு:
மனிதனின் மனம் நல்லதை நினைக்கும் போது அவர் நல்ல வழியிலேயே நடத்த படுவார் அவரின் மகிழ்ச்சிகரமான வாழ்வு அவரே காரணமாகிறார்.

நமது வினைப்பயன்கள் காரணமாகவே நன்மை தீமை நடக்கின்றன தகுந்த நேரத்தில் அதற்குரிய நபரால் பாவ புண்ணியக் கணக்கின் படி அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன.
நமக்கு எதிரிகள் என்று யாரையும் நினைக்க தேவையில்லை அவர் இல்லை என்றாலும் வேறு ஒருவர் மூலமும் வினைப் பயன்களை அறுவடை நடக்கத்தான் செய்யும்.
மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப உடலில் நோய் உருவாக்கும்

தற்பெருமையும் கர்வமும் மனதில் ஏற்பட்டால் இதய நோயை உருவாக்கும்.
கவலையும் துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய் உருவாக்கும்.
துக்கமும் அழுகையும் சுவாச நோயை உருவாக்கும்.
பயமும் சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்.
எரிச்சலும் கோபமும் கல்லீரலில் நோய் உருவாக்கும். அமைதியும் ஆனந்தமும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.
நம் மன உணர்வுகளுக்கு ஏற்ப நம் உடலில் உள்ள சுரப்பிகள் வேலை செய்கின்றன நமக்கு என்றும் மனசே மருந்து.
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருந்தால்தான் நம் உடலில் நல்ல சுரப்பிகள் சுரக்கும் இல்லையெனில் அமிலம் போல் சுரந்து உடல் நலம் கெடும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam