பள்ளி

Visitors have accessed this post 326 times.

பள்ளி என்பது அறிவுக்களஞ்சியம்

மாணவர்கள் என்பதோ தானியகளஞ்சியம்!

ஆசிரியர்கள் என்னும் புலவர்கள்

அவர்களே மாணவர்களின் முதல்வர்கள்!

பள்ளி என்னும் கோவிலில்

ஆசிரியர்களே சிறந்த தெய்வம்!

பள்ளி என்னும் வகுப்பறை – அது

மாணவர்களின் வெற்றிப்பாதை!

வகுப்பறையில் ஆசிரியரின் போதனை – அது

மாணவர்களின் அறிவு சாதனை!

ஊக்கம் அளித்து வந்தாய் – என்னை

வெற்றி என்னும் பாதைக்கு மலராக

புத்துணர்வு கொடுத்து வந்தாய் – என்

வாழ்வின் வெற்றி பயணமாக

சோர்ந்துபோன என்னை தட்டியெழுப்பிய

ஆசிரியர்கள் என்னும் கனியாக

குழந்தைப் பருவ நிகழ்ச்சியில் – உன்னை

நினைத்து பார்த்து மகிழ்ந்தேன்!.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam