Visitors have accessed this post 766 times.

பாசிப்பயறு சாலட்

Visitors have accessed this post 766 times.

முளைகட்டிய பச்சைப்பயறு சாலட்

  ஆரோக்கிய உணவு நமது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எளிதாக செரிமாணமாக கூடிய தரமான புரதச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்திருக்கும்  முளைகட்டிய பயறு வகைகள் சாலட் ஆக செய்து அனைவரும் சுவைக்க வேண்டும்.இது அதிக சத்து  நிறைந்தது. உடல் எடை குறைய உதவும்.

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பச்சைப்பயறு : 2 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1

பொடியாக நறுக்கிய தக்காளி : 1

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் : 1

மிளகாய் தூள் : 1/4 டீஸ்பூன்

சாட் மசாலா : 1/2 டீஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

எலுமிச்சை சாறு : தேவையான அளவு

வேக வைத்த உருளை கிழங்கு : 1

கொத்தமல்லி இலை : சிறிதளவு

செய்முறை:

  முளைகட்டிய பாசிப்பயறை நீரில் கழுவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அல்லது கொதிக்கும் நீரில் வேக வைத்து கொள்ளவும்.

நன்கு தண்ணீர் வடித்த பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய தக்காளி ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வேக வைத்த உருளை கிழங்கு , மிளகாய் தூள்,சாட் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு , மல்லி இலை கலந்து பரிமாறவும். 

முளை கட்டும் முறை :

    பாசிப்பயறை நீரில்  ஐந்து  மணி நேரம் ஊற வைத்து பின் நீரை வடித்து ஒரு உலரந்த துணியில் கட்டி வைக்க வேண்டும். அடுத்த நாள் நன்கு முளை விட்டு விடும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam