Visitors have accessed this post 766 times.

பாரம்பரிய நெல்

Visitors have accessed this post 766 times.

நம் நெல் அறிவோம்

வால் சிவப்பு நெல்

நாம் மறந்து போன
பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன்.

அந்த வகையில்
இன்றைய பதிவில்
நாம் பார்க்க இருப்பது
*வால் சிவப்பு *
என்கிற பாரம்பரிய ரகம்
நெல் பற்றி தான்.

பாரம்பரிய நெல் வகையாக உள்ள வால் சிவப்பு (Val Sivappu) நெல் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள 
“வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும்.

145 – 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய
இந்த நெல் இரகம், சுமார் 160 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும்.
வால் சிவப்பு நெல்மணி
சிவப்பு நிறமுடனும், சிறந்த சுவையுடனும் விளங்குகிறது.

மேலும், இந்த நெல் மணியின் பின்புறத்தில் காணப்படும் ஒரு முள், மயிர் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் சிறிய பறவையின் வால் போன்று காட்சி அளிக்கிறது.மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான வால் சிவப்பு, செப்டம்பர் 15 இல் தொடங்கும் பின் சம்பா பட்டம் (பருவம்) ஏற்றதாகும்.

மேலும், தமிழகத்தின் 
திருவள்ளூர், தேனி, 
திண்டுக்கல், 
கோயம்புத்தூர், 
மதுரை, தூத்துக்குடி, 
கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் 
வேளாண்மை நடப்பது குறிப்பிடத்தக்கது.

வால் சிவப்பு நெல், ஒரு ஏக்கருக்கு சுமார் 900 கிலோ வரையில் (75 கிலோ பையில், 12 பைகள்) விளைச்சல் தரக்கூடியது.

வால் சிவப்பு நெல்லிலிருந்து கிடைக்கும் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு.

”பிரவுன் ரைஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வால் சிவப்பு அரிசியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதிலுள்ள சத்துக்கள் நீக்கி பலமுறை தீட்டப்பட்ட பிறகு நமக்குக் கிடைக்கின்ற அரிசிதான் நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி.

வால் சிவப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்

வால் சிவப்பு அரிசியில் மாங்கனீஸ், மக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் உள்ளது,.இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வால் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தானிய வகைகளில் வால் சிவப்பு அரிசியில் மட்டும்தான் வைட்டமின் ஈ உள்ளது.
வால் சிவப்பு அரிசியில்
நார்ச் சத்தும் மாவுச் சத்தும் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
மேலும் இதில் உள்ள
நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பாதுகாத்துக்கொள்ளும்.

வால் சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இதில்
உள்ள தாது உப்புக்கள்
கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் நன்கு வளர்ச்சி அடையும்.
வாய்ப் புண்கள் குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட வால் சிவப்பு அரிசி சாப்பிடுவது பல மடங்கு நல்லது

வால் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம்போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
இந்த வகையில் வால் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு.
இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும்
மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல் வால்  சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

கேன்சர், சர்க்கரைக் கோளாறு என்று எந்தப் பிரச்னையானாலும், முறையாக சிகிச்சை பெற்று, குணம் அடைந்து, மகிழ்ச்சியாக செல்லும் பலரும், அடுத்த ஓராண்டில், அதே பிரச்னைகளோடு திரும்பவும் வருகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாக  இருக்கிறது.

மருந்துகளுக்கு கட்டுப்படும் நோய், மீண்டும் வந்து விடுகிறது.

உடல்
கோளாறுகளுக்கான
மூல காரணத்தைக் கண்டறிந்து,
சரி செய்வது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் .

சரியான உணவுப் பழக்கத்தால் மட்டுமே, நோயின்றி வாழ முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிர் செய்யும் விவசாயிகளை தொடர்ந்து சந்தித்ததில், அரிசி குறித்த அற்புதமான விஷயங்கள் கிடைத்துள்ளன.

பாரம்பரிய அரிசி குறித்து, நம்மில் பலருக்கும் தெரியாது; தமிழகத்தில், அதிக அளவில்
பயன்படுத்துவது, காவிரி டெல்டாவில் பயிராகும்,
மேம்படுத்தப்பட்ட, பொன்னி அரிசி.
இதில் எந்த பலனும் இல்லை.மருத்துவ  ஆலோசனைக்கு வரும் நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு, 300 எம்.ஜி., /டி.எல்., என்ற அளவிற்கு மேல் இருந்தால் மட்டுமே மருந்துகள் எடுத்துகள் கொள்ள வேண்டும்.
அதற்கு குறைவாக இருந்தால், குறிப்பிட்ட வகை பாராம்பரிய அரிசி, சமைக்காத காய்கறிகள், பழங்கள் என்று உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தே, சரி செய்து விட முடியும்.

பொன்னி அரிசியில், கார்போஹைட்ரேட், 92 யூனிட், கிளைசிமிக் இன்டெக்ஸ்,
89 யூனிட்டுகளும் உள்ளன. தொடர்ந்து இதைச் சாப்பிட்டால், ரத்த சர்க்கரையின் அளவு இயல்பாகவே அதிகரிக்கும்.

பாரம்பரிய அரிசியில், கிளைசிமிக் இன்டெக்ஸ்,
56 யூனிட் மட்டுமே உள்ளது.

பாரம்பரிய அரிசியில், இயற்கையாக உள்ள சத்துகளும், குணங்களும் எத்தனை தலைமுறைகள்
ஆனாலும்மாறாமல் இருக்கும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam