Visitors have accessed this post 450 times.
பெரும்பாலன வீட்டில் பூனைக்குட்டிக்கள் வளர்ப்பு பிராணியாக வளர்க்கபடுகின்றன. ஆனால் அதை வளர்க்கும் விதமும் பற்றிய கட்டுரைதான் இவை,
ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும்போது நம் குறுக்கே பூனை சென்றுவிட்டால், அது அபசகுணம் என்று எண்ணுவது நம்முடைய வழக்கும். அதுவே, குறிப்பாக கருப்பு பூனை சென்றுவிட்டால் ஐயோ!! கட்டாயம், அந்த நல்ல காரியத்திற்கு செல்லவே மாட்டார்கள்! இது ரொம்ப காலமாக, நாம் கடைப்பிடித்து வரும் ஒரு முறை என்றே சொல்லலாம். எதையும் கேலி, கிண்டல் செய்வதற்காக சொல்லப்படவில்லை. இருப்பினும், யாரோ, எப்போதோ ஒரு விஷயத்திற்கு சென்றிருப்பார்கள்! அந்த விஷயம் தடங்கல் ஆயிருக்கும்! அந்த சமயத்தில், அவர்கள் வெளியே கிளம்பி இருக்கும் போது, எதேர்ச்சியாக பூனை குறுக்கே சென்றிருக்கும். பூனை குறுக்கே சென்றதால் தான், அந்த காரியம் கெட்டு விட்டது என்று, கட்டாயம் அந்த இடத்தில் ஒரு கதையை கட்டத் தான் செய்வார்கள். மனிதர்களுடைய இயல்பே இதுதான். சில பேருக்கு இது மூடநம்பிக்கை, சில பேருக்கு இது நம்பிக்கை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பூனையைப் பற்றி கெட்டதாக யார் எது சொன்னாலும், நம் ஆழ்மனதில் அது அப்படியே புதைந்து விட்டது. பூனையைப் பற்றி நாம் அறிய இன்னும் சில நிறைய விஷயங்கள் இருக்கின்றது. நம்முடைய வீட்டில் பூனை வளர்த்தால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால், ஆச்சரியத்தில் மூழ்க தான் செய்வீர்கள்! அது என்வென்றால்,
நிறைய பொருட்களை வைத்து இப்போதெல்லாம் பண ஈர்ப்புவிதி சொல்லப்படுகிறது. முகம் பார்க்கும் கண்ணாடி, உள்ளங்கை, பசுமையான காட்சிகள், கல்லுப்பு பச்சை கற்பூரம், வெட்டிவேர் இப்படி பல வகையான பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்பதை நாம் அறிந்திருப்போம். அந்த வரிசையில், பணத்தை ஈர்க்கக்கூடிய விதிமுறைகளில், பூனை வளர்த்தால் அது நமக்கு நேர்மறை ஆற்றல் கொடுக்கும் என்றும், நம்முடைய வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எவர் ஒருவர் வீட்டில் பூனை வளர்க்கின்றார்களோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடே வராதாம்.
குறிப்பாக, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையான ஹார்ட் அட்டாக் (Heart Attack) வருவது குறைவதற்கு, பூனை வளர்ப்பு மிகவும் உபயோகமானதாக உள்ளது என்று சொல்லப்படுக்கின்றன. பூனை வளர்த்தால், ஹார்ட் அட்டாக் (Heart Attack) வராது என்று சொல்லப்படவில்லை! இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகின்றன.
வீட்டின் அருகிலோ, அக்கம் பக்கத்திலோ, பூனையைப் பார்த்தால் அதை விரட்டக் கூடாது. துன்புறுத்தக் கூடாது. உங்களுடைய வீட்டிலும் ஒரு பூனையை வளர்த்துப் பாருங்கள்! எதிர்காலத்தில் கையிலும், பையிலும் நிறைய பணம் இருப்பதற்கு உண்டான அதிர்ஷ்டத்தை, அந்த பூனை தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.