Visitors have accessed this post 743 times.
பெற்றோர்கள் செய்யும் தவறு:
குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்கள் தவறுகள் செய்கின்ற சிறிய தவறு தான் அவர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் . பொதுவாக பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் .
பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பது மிகவும் சிறந்த ஒன்று குழந்தைகளிடம் மிகவும் நட்பாக அன்பாக பழக வேண்டும்.
பொதுவாகவே ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகள் அவர்களின் பிரச்சினைகளையும் தன் மனதில் உள்ளவற்றை பிறரிடம் கூறுவது மிகவும் கடினமான ஒன்று ஏனென்றால் அவர்கள் எளிதில் யாரிடமும் எதையும் சொல்ல மாட்டார்கள். அதுவே அவர்களுக்கு பலவீனத்தையும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றது.
பெண் குழந்தைகளிடம் கோபமாகவும் அவர்களை கண்டித்து வளர்ப்பது மிகவும் தவறு அவர்களுடன் நட்பாக பழக வேண்டும் பெற்றோர்கள் அவர்கள் அதைத்தான் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு பெண் குழந்தை தான் என்ன சொல்ல வருகிறது என்பதை பெற்றோர்கள் முதலில் கேட்க வேண்டும் அதற்கு அவர்களுக்கு ஏற்றவாறு அதற்கான தீர்வை கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். உன் மேல் தான் தவறு உள்ளது என்று பெண் குழந்தைகளிடம் கடுமையாக நடப்பதை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஒரு குழந்தையை தான் என்ன சொல்ல வருகிறது என்று கேட்காமல் அவரிடம் கோபமாக நடந்து கொண்டால் பெண் குழந்தைகள் என்ன நடந்தாலும் பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கவே பார்க்கின்றார்கள்.
ஏனென்றால் பெற்றோர்களின் மீது அவர்களுக்கு பயம் ஏற்பட்டு விடுகின்றது.
ஒரு பெண் குழந்தை தவறு செய்து இருந்தாலும் அதை பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூறுவது பெற்றோர்களின் முழு கடமையாகும் மாறாக கோபம் கொள்ளக்கூடாது.
பொதுவாக பெண் குழந்தைகளிடம் தந்தையைக் காட்டிலும் தாய் மிகவும் பொறுமையாக அணுகுவது மிகவும் சிறந்த ஒன்று மற்றும் அவர்களின் அன்றாட செயல்பாடு களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்காமல் அவர்களை தனியாக வெளியே அனுப்ப மறுத்தாலும் தாய் அல்லது தந்தை அவர்களை வெளியே அழைத்துச் செல்வது மிகவும் நன்று அது அவர்களின் மனநிலையை முற்றிலும் மாற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் .
பெற்றோர்களின் அரவணைப்பு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும் , தன்னம்பிக்கையும் அளிக்கின்றது.
பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.