Visitors have accessed this post 828 times.
பொலிவான முகம் வேண்டுமா?
நமது முகம் நம் மனதின் கண்ணாடி என்று ஒரு கூற்று உண்டு. நம் எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் நம் முகத்தின் மொழி.
உங்களது மனம் எவ்வளவு நிம்மதியுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்கள் முகம் பொலிவுடன் நிச்சயமாக இருக்கும். அதனால் முகப்பொலிவை விரும்பும் ஒவ்வொருவரும் தங்களது மனதை அதிக சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சரி உங்கள் அக அழகை எப்படி கொண்டு வருவது என்று சொல்லி விட்டேன், புற முக அழகை எப்படி பேணி காப்பது என்று பார்க்கலாம் வாங்க.
உங்களது முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவும் சில டிப்ஸ்களை நான் உங்களுக்கு இப்பொழுது கூறுகிறேன். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நீங்கள் தினமும் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் பால். பாலில் எப்படி முக அழகு பெறுவது, அத குடித்தால் ஆரோக்கியமாவது மேம்படும் என்று நீங்க யோசிப்பது எனக்கு புரியுது. அப்படிப்பட்ட பால் முகத்தையும் சீராக்கும் தன்மை கொண்டது. நிச்சயமாக நம் அனைவரது வீட்டிலும் பால் என்பது இருக்கும். அன்றாடம் பயன்படுத்தும் இந்த பாலை தினமும் காலை சிறிதளவு முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தீர்களானால் உங்கள் முகம் பொலிவு பெறுவதை உங்களால் காணமுடியும்.
அதுமட்டுமல்லாமல் தினமும் இவ்வாறு நீங்கள் முகத்தில் பாலை தடவி மசாஜ் செய்து வந்தீர்களானால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தேமல்,அலர்ஜி போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு முகச்சுருக்கம் என்பது மிகப் பெரும் தலைவலியாக இருக்கும். இளம் வயதிலேயே முகச் சுருக்கங்கள் ஏற்பட்டு, முகம் வயதானது போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கும். இதுபோன்று இளம் வயதில் தோன்றும் முக சுருக்கங்களை கட்டுப்படுத்த, நீங்கள் தினமும் முகத்தில் இந்த பாலை தடவி வந்தால் போதும். முக சுருகண்ககள் நீங்கி முகம் பொலிவு பெரும்.
பாலுடன் சிறிது வாழைப்பழத்தையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி வந்தால் அது இன்னமும் அதிக பலனை தரும். சிலருக்கு வறண்ட சருமமாக இருக்கும். எப்பொழுதும் முகம் ஒருமாதிரி வறண்டு, வெள்ளை திட்டுகள் அங்கங்கே காணப்படும். இதற்கு முக்கிய காரணம் உங்களது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். அதனால் முதலில் நீங்கள் அதிக நீரைப் பருக வேண்டும். அதுமட்டுமல்லாமல் வறண்ட சருமத்திற்கு என்று சில மாய்ச்சுரைசர்களை வாங்கி நாம் பயன்படுத்தி வருகிறோம். அது முழுதும் கெமிக்கல்ஸ் நிறைந்து காணப்படுவதால், கெமிக்கல் இல்லாத ஒரு மாய்ச்சுரைசர் ஆகத்தான் இந்த பால் நமக்கு பயன்படுகிறது. ஏனென்றால் அந்தளவுக்கு இந்த பாலில் குணநலன்கள் உள்ளது.
சிலருக்கு முகத்தில் தழும்புகள் ஏற்பட்டிருக்கும் அல்லது கரும்புள்ளிகள் இருக்கும். இவற்றை சரிசெய்ய தினமும் காலையில் முகத்தில் பாலை தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பசும்பால் உங்களுக்கு கிடைப்பின் அதை காய்ச்சாமல் அப்படியே முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தீர்களேயென்றால் நல்ல பலனை பெறலாம். கரும்புள்ளிகள் அதிகமாக இருப்பின், உருளைக்கிழங்கை அரைத்து அதில் பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ கரும்புள்ளிகள் தழும்புகள் மறையும்.
நமது முகம் பொலிவின்றி வறண்டு காணப்படுவதற்கான முக்கியக் காரணம் என்னவென்றால் நான் முன்னரே கூறிய படி உடலில் ஏற்படும் நீர்சத்து குறைவே ஆகும். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தினமும் உணவுடன் ஏதேனும் ஒரு பிழை வகைகளையாவது சேர்த்து கொள்ளுங்கள். அதோடு முகத்தில் பாலைக் கொண்டு மசாஜ் செய்வதால் முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி பொலிவு கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் தான்.ஏனென்றால் இந்த லாக்டிக் அமிலத்திற்கு சருமம் வறண்டு போகாமல் காக்கும் தன்மை இருக்கிறது. மேலும் வறட்சியின் காரணமாக சருமத்தில் ஏற்படும் சரும விரிசல் பிரச்சனைகளை சரிசெய்ய இது உதவுகிறது. எனவே பாலை தினமும் பயன்படுத்தி வர உங்கள் முகம் மற்றும் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும் என்பது நிச்சயம். நாம் அன்றாடம் பயன் படுத்தும் ஒரு பொருளில் எவ்வளவு நலன்கள் இருக்கிறது அல்லவா!