Visitors have accessed this post 720 times.
மினி பெப்பர் இட்லி
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
மினி இட்லி 15
வெங்காயம் 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா 1 டீஸ்பு+ன்
கொத்தமல்லி இலை 1ஃ4 கப்
உப்பு தேவையான அளவு
மிளகு 2 டீஸ்பு+ன்
சோம்பு 1 டீஸ்பு+ன்
எண்ணெய் தேவையான அளவு
பு+ண்டு 1 டேபிள்ஸ்பு+ன் (நறுக்கியது)
கறிவேப்பிலை5 இலைகள்
செய்முறை :
🍪 மினி பெப்பர் இட்லி செய்வதற்கு முதலில் இட்லி மாவை இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லி தட்டுகளில் ஊற்றி, மினி இட்லிகளாக சுட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
🍪 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
🍪 அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சு+டானதும், அதில் நறுக்கிய பு+ண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
🍪 வெங்காயம் வதங்கியதும், அதில் குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் மினி இட்லிகளை சேர்த்து, சிறிது நீரை தௌpத்துக் கிளறவும்.
🍪 சுவையான மினி பெப்பர் இட்லி ரெடி.