Visitors have accessed this post 772 times.
வறுமை
வறுமை அதிகப்படியான மக்களை பாதிப்படையச் செய்கின்றது.
நம் உலகில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் முடியும் என்று நினைப்பவர்கள் தன்னுடைய பொருளாதாரத்தை வறுமையிலிருந்து மாற்றி அமைக்கின்றன முடியாது என்று நினைப்பவர்கள் அதே நிலையில் தான் கடைசிவரைக்கும் இருக்கின்றன.
வறுமை மிகவும் கொடியது அது பலரின் மனதை பாதிக்கச் செய்கின்றது வறுமையில் வாழும் பொழுது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது இதனால் பலர் மன உளைச்சலில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்கின்றன .
வறுமையில் வாழும் பொழுது உணவு பற்றாக்குறை ஏற்படுகின்றது நல்ல துணிகளை அணிய முடிவதில்லை பாதுகாப்பான வீடு இருப்பதில்லை இவ்வாறு பல குடும்பங்கள் நம் நாட்டில் வாழ்கின்றன.
சிலர் சாலை ஓரங்களில் படுத்து தூங்குகின்றன அதில் பலர் முதியவர்களே உள்ளன .
அன்றாடும் யாரோ ஒருவர் கொடுக்கும் உணவுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .
ஒரு காலத்தில் நம்மைப் போன்று தான் அவர்களும் வாழ்ந்து இருப்பார்கள் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அவர்களால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றனர் அதுவும் தன் வாழ்நாள் முடியும் தருணத்தில்.
எத்தனை கனவுகளோடு அவர்களும் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி இருப்பார்கள் சில காரணங்களால் அவர்கள் கனவுகள் உடைந்து சிதைந்து விட்டது.
வயதான காலத்தில் அவர்களின் பிள்ளைகள் அவர்களை சரிவர கவனிக்காமல் அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுகின்றன இல்லை என்றால் நடு ரோட்டிலேயே விட்டு செல்கின்றனர்.
பல ஆசைகளுடன் பெற்றோர்கள் அந்தக் குழந்தையை எப்படி வளர்த்திருப்பார்கள் சிறிது கூட அதைப் பற்றி யோசிப்பது கிடையாது.
எந்த ஒரு தாயும் அல்லது தந்தையும் தன்னுடைய குழந்தை ஒரு நாள் தன்னை நடுரோட்டில் விட்டு விட்டு செல்லும் என்று நினைத்து அந்த குழந்தையை வளர்ப்பது கிடையாது.
தான் நன்றாக வாழ முடியவில்லை என்றாலும் தன் குழந்தை ஒரு நாள் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடனே அந்த குழந்தையை அந்த பெற்றோர்கள் வளர்கின்றன.
ஆனால் குழந்தைகளோ பெற்றோர்கள் தம் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்று நினைப்பது கிடையாது.
வறுமையில் இருப்பவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்வது மிக சிறந்த ஒன்று.
சாலையோரம் இருக்கும் முதியவர்களுக்கு தம்மால் முடிந்த ஏதோ ஒரு சிறு உணவை வாங்கிக் கொடுப்பது நல்ல ஒரு விஷயமாகும்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்தலை உலகில் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
இருப்பவர்களை அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும் . நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யலாம் நம் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய கற்றுக் கொடுக்கலாம் இதுவே சிறந்த ஒன்றாகும் நம் உலகில்.
பெரிய அளவில் வறுமையை ஒழிக்க முடியாவிட்டாலும் சிறிய அளவில் வறுமை குறைக்கலாம் நம்மளால் முயன்றவரை.