Visitors have accessed this post 764 times.
வாழைப்பூ வடை
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
வாழைப்பூ1
துவரம்பருப்பு200 கிராம்
காய்ந்த மிளகாய்6
சோம்புஅரை டீஸ்பூன்
சீரகம்அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம்25
மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
கறிவேப்பிலைஒரு கொத்து
உப்புதேவைக்கேற்ப
நல்லெண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்துவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
துவரம்பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், மிளகாய் சேர்த்து கொஞ்சம் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் துவரையுடன் வாழைப்பூவை சேர்த்து பிணைந்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான வாழைப்பூ வடை ரெடி.