Visitors have accessed this post 798 times.
வாழை இலை மேல் சூடான சாதம் வைத்து விருந்தே சாப்பிட்டிருப்போம். வாழை மரத்தின் தண்டு, வாழை பூ, வாழைக்காய், வாழைப்பழம் என அனைத்தும் சுவையுடன் சேர்த்து மருத்துவ குணங்கள் மிகுந்தே உள்ளன.
அப்படிப்பட்ட வாழை குடும்பத்தைச் சேர்ந்த வாழை இலை வைத்து வித்தியாசமாக வாழை இலை அல்வா செய்வோம்
தேவையான பொருட்கள்-வாழை இலை-1,வெல்லம்-250கிராம், சோள மாவு-50கிராம், நெய், முந்திரி,திராட்சை-தேவையான அளவு
வாழை இலையை சுத்தமாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.வாழை இலையின் நடுவில் உள்ள தண்டு பகுதியை அகற்றி விடுங்கள்.
பின்பு,வாழை இலையை சிறுசிறு துண்டுகளாகப் வெட்டி மிக்சியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த வாழை இலையை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை காய்ச்சவும். வெல்லம் கரைந்த பிறகு வடிகட்டிய வாழை இலையை சேர்க்கவும்.
பிறகு,50 கிராம் சோள மாவை தண்ணீரில் கலக்கி அதனோடு சேர்த்து கிண்டவும்.
தனியாக இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்தெடுக்கவும்
சிறிது நேரத்தில், அல்வா பதத்திற்கு வந்த பிறகு நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை கலந்து இறக்கி விடவும்
பார்க்க பசுமை.. கண்களுக்கு குளிர்ச்சி.. சாப்பிட்டால் அமிர்தம் தான் வாழை இலை அல்வா.
வாழை இலை கொண்டு அல்வா செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துங்கள்