Visitors have accessed this post 661 times.

வெந்தயக்கீரை இட்லி

Visitors have accessed this post 661 times.

வெந்தயக்கீரை இட்லி 

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

இட்லி மாவு4 கப்

வெந்தயக்கீரை 3 கட்டு

பெரிய வெங்காயம் 2

எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள்ஸ்பு+ன்

உப்பு தேவையான அளவு 

காய்ந்த மிளகாய் 8

கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பு+ன்

உளுத்தம் பருப்பு 4 டீஸ்பு+ன்

தேங்காய் துருவல்3 டேபிள்ஸ்பு+ன்

சீரகம் 1ஃ2 டீஸ்பு+ன்

பெருங்காயம் 1ஃ2 டீஸ்பு+ன்

கடுகு 1ஃ4 டீஸ்பு+ன்

உளுத்தம்பருப்பு 3 டீஸ்பு+ன்

நெய் 2 டேபிள்ஸ்பு+ன்

எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

 

🍪 வெந்தயக்கீரை இட்லி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 

🍪 வெந்தயக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளவும்.

 

🍪 பிறகு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

 

🍪 இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

🍪 எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சு+டானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

 

🍪 வெங்காயம் நன்கு வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.

 

🍪 பிறகு, பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி, அதனுடன் இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச்சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.

 

🍪 வெந்தயக்கீரை இட்லி தயார். 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam