Visitors have accessed this post 638 times.

வெந்தயத்தின் விந்தை

Visitors have accessed this post 638 times.

வெந்தயத்தின் விந்தை:

  உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்க வேண்டும் என்றால், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தய கீரையில் பல நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது.100 கிராம் வெந்தய கீரையில் 49 கலோரிகள் உள்ளன. தாது உப்புகள்,பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது.

வைட்டமின் சி, ஏ அதிகளவில் உள்ளது.நார்ச்சத்துள்ள உணவுப் பொருள் என்பதால் நீரிழிவு நோயாிகளுக்கு ஏற்றது. குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். அஜிரண கோளாறுகளை போக்கும்.

வெந்தய கீரை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். மார்பக புற்றுநோய் ஏட்படுவது தடுக்க படுகிறது.மூட்டு வலிக்கு சிறந்த மருந்து. வயிற்று போக்கால் அவதிப்படுபவர்கள் வெந்தயம் மற்றும் பெருங்காத்தூள் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று முறை குடிக்க வயிற்று போக்கு கட்டுப்படும்.

நீரிழிவை தடுக்கும் வெந்தயத்தில், பாஸ்பேட், நீயுகிலியோ, லிசிதின், அல்புமின் நிறைந்தது. உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.பசியின்மையை போக்கும்.இரத்த சோகை வராமல் தடுக்கும்.

வெந்தயம் ஊற வைத்து அல்லது வெந்தய பொடியை நீரில் கலந்துகுடிக்க சர்க்கரை அளவு குறையும்.உடலை பொழிவாகுவதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. வாரம் ஒரு முறை வெந்தய தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற எந்த நோயும் நெருங்காது.

வெந்தயத்தில் உள்ள எண்ணெய் பசை முடிக்கு கருமை நிறத்தை தருகிறது. வெந்தயம் கூந்தல் தைலங்கள் தயாரிக்கபயன்படுகிறது.வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி குணமாகும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam