Visitors have accessed this post 1295 times.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்
தண்ணீரின் முக்கியத்துவம்
நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.
மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.
இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.
தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.
பசியைத் தூண்டும்
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
இரத்த செல்கள் உற்பத்தியாகும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.
அல்சரைத் தடுக்கும்
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடையை குறைக்க உதவும்
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.
தண்ணீர் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதது. இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. தண்ணீர் குடிப்பது மிகவும் நல்ல விஷயங்களில் ஒன்று தான். காலையில் எழுந்ததும் தண்ணீரை குடிப்பது காலையில் மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு தண்ணீருக்கு தான் உண்டு.
உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின் தண்ணீர் அருந்துவது, நம் உடலில் உள்ள சிறுநீரக குடல்களையும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்து கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டது தண்ணீர்.
தண்ணீரை காலை எழுந்தவுடன் குடிக்க அது வாய் துர்நாற்றத்தை தடுக்கும் மற்றும் பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும், புத்துணர்ச்சியை கொடுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.
தண்ணீரை குடிக்கும் போது வாய் வைத்தே குடிக்க வேண்டும். தண்ணீரை குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக வெளியேற்றும்.
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பூமி முழுவதும் சுமார் 75% தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் 2.5% மட்டுமே மனிதர்களால் மனிதர்கள் குடிக்க பயன்படுத்தும் சுத்தமான தண்ணீராக உள்ளது. நமது உடலில் 60%-ற்கும் மேலாக தண்ணீரால் மட்டுமே நிரம்பியுள்ளது. இதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து எப்பொழுதும் கிடைக்கிறது.
நமது உடலில் உள்ள எல்லா அமைப்புகளும் தண்ணீரின் செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளன. அதாவது தண்ணீர் இயற்கையான உராய்வைத் தடுக்கும் பொருளாக செயல்பட்டு நமது உடல் பாகங்களை மென்மையாக செயல்பட வைக்கிறது.
நமது உடலில் உள்ள நச்சப் பொருட்கள் மற்றும் சிறுநீர், வியர்வை வழியாக உடலில் உற்பத்தியாகும் பிற தேவையற்றவற்றை வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது. நமது செல்களுக்கு சத்துக்களை எடுத்துச் செல்லவும் மற்றும் காது, மூக்கு, தொண்டை பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்கவும் தண்ணீர்; உதவுகிறது. தண்ணீரின் அளவு குறைந்தால், உங்களுடைய உடல் தளர்ந்து விடும். குறைந்த அளவில் இந்த பிரச்சனை வந்தால் கூட அது உங்கள் சக்தியை உறிஞ்சி தளரச் செய்துவிடும்.
‘நான் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?’ என்று கேட்பது பலரிடமும் உள்ள கேள்வி. அது ஒவ்வொரு மனிதரும் வசிக்கும் பருவநிலை, புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறை போன்ற காரணிகளைப் பொறுத்தது. நீங்கள் வெப்பமண்டலப் பகுதிகளில் வசித்து வந்தால், இலண்டனில் வசிப்பவரை விட அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
வெப்பமான பருவநிலையில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் நிறைய தண்ணீர் குடித்து உடலை புதுப்பிக்க வேண்டியிருக்கும். அதே போல, விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களும் மற்றும் கடினமான உடலுழைப்புகளில் ஈடுபடுபவர்களும் அவர்களுடைய உடலின் நீர்ம அளவை பராமரிக்கும் பொருட்டாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இங்கே தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய பலன்கள் தரப்பட்டுள்ளன.
உடலின் நீர்மங்களை சமநிலைப்படுத்துதல்
உங்கள் உடலில் 60% தண்ணீரைக் கொண்டுள்ளதால், போதுமான அளவு தண்ணீரை பெற்றிருந்தால் தான் செரிமாணம், கிரகித்தல், இரத்த ஓட்டம், எச்சில் உருவாக்கம், ஊட்டச்சத்துக்கள் சென்றடைதல் மற்றும் உடலின் வெப்பநிலை பராமரிப்பு ஆகியவை சிறப்பாக நடக்கும்.
கலோரிகளை கட்டுப்படுத்துதல்
எடை குறைப்புக்கு தண்ணீர் பயன்படும் என்று பலருக்கும் தெரிவதில்லை. உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் எடை குறைப்பிற்கான மருந்தாக தண்ணீர் உள்ளது. தண்ணீர் மறைமுகமாக பசியைக் குறைக்கவும், செரிமாணத்தை ஏற்படுத்தி கலோரி அளவை பூஜ்யத்திற்கு கொண்டு செல்லவும் செய்கிறது.
தலை பாரத்தை குறைத்தல்
ஆல்கஹால் அருந்தியவர்ளுக்கு தலை பாரமாக இருப்பது போல் தோன்றுவது. ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் அதிகபட்ச வறட்சியால் தான் இது நிகழ்கிறது. இந்நேரங்களில், நீங்கள் அதிகளவு தண்ணீர் குடித்து உங்கள் உடலை புதுப்பிக்க வேண்டும்.
சக்தியூட்டுதல் தண்ணீரில்
சொல்லிக் கொள்ளும் படியாக சத்துக்கள் இல்லையென்றாலும், அதன் அளவு குறையும் போது சோர்வையும், பலவீனத்தையும் உணருவீர்கள். சோர்வு மற்றும் தூக்கமின்மையை நீங்கள் தண்ணீரைக் கொண்டு துரத்தி விட முடியும். குளிர்ந்த நீரைக் குடித்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சியடைவதுடன், உடலின் வெப்பநிலையை பராமரிக்கும் பொருட்டாக அதிகபட்ச கலோரிகளையும் எரித்து விடும்.
தோல் பராமாரிப்பு
உங்கள் தோல் வியர்வையின் மூலமாக தண்ணீரை கட்டுக்குள் வைக்கிறது மற்றும் தண்ணீரை ஒரு பாதுகாப்பு அடுக்காக பயன்படுத்துவதற்காக நிறைய தண்ணீரை கிரகித்துக் கொள்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது உங்களுடைய தோல் வறட்சியாகவும், சுருக்கங்களுடனும் இருக்கும்.
சிறுநீரகங்களின் ஆரோக்கியம்
உடலின் செல்களிலிருந்து தேவையற்ற பொருட்களை உடலிலுள்ள நீர்மங்கள் வெளியேற்ற முயல்கின்றன. நமது உடலில் உள்ள முதன்மையான நச்சுப்பொருளாக இருப்பது தண்ணீரில் கரையக் கூடிய யூரிய நைட்ரஜன் ஆகும். இது தண்ணீர் வழியாக சிறுநீரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
இரைப்பையின் செயல்பாட்டுக்கு உதவுதல்
உங்களுடைய இரைப்பை குடல் வழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவை உள்ளது. அதன் மூலமே இவை எளிதாக ஊடுருவி செல்லவும் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கவும் செய்கின்றன. தண்ணீர் நார்களை துடைக்கவும் மற்றும் ஒரு சுத்தம் செய்யும் கருவியைப் போல் செயல்பட்டு வயிற்றின் இரைப்பையை சரிவர செயல்படவும் செய்கிறது.
நச்சு நீக்கி
உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு நமக்கு பெருமளவு தண்ணீர் தேவைப்படுகிறது. நமது உடலில் சேர்ந்திருக்கும் பெரும்பாலான நச்சுப்பொருட்கள் செல்கள் வழியாக நீர்மங்களாக வெளியேற்றப்படுகின்றன.
தசைகள்
உங்கள் தசைகள் செயல்படும் போது அதன் மேற்பரப்பில் ஏராளமான இழுவிசைகள் ஏற்படுகின்றன. இந்த செயல்பாடு சிறப்பாக நடக்க ஏராளமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இஞ்சின் ஆயில் போன்று தண்ணீர் செயல்பட்டு தசைபிடிப்பு மற்றும் சுளுக்குகள் ஏற்படாமல் இங்கே தவிர்க்கப்படுகிறது.
மூட்டுகளுக்கு நன்மை தருதல்
தண்ணீர் அதிகம் குடிப்பதால் உங்களுடைய மூட்டுகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் உராய்வில்லாமலும் இருக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். உங்களுடைய மூட்டுகள் உறுதியாகவும் மற்றும் நெகிழ்வுடனும் நெடுங்காலம் இருக்க அவற்றிற்கு ஈரப்பதம் தேவைப்படுகிறது.