Visitors have accessed this post 626 times.
- வெள்ளரிகாய் தயிர் பச்சடி:
கேரள மககள் விஷேச தினகளில் கட்டாயம் வெள்ளரி தயிர் பச்சடி சமைப்பர். நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க தயிரோடு பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெள்ளரிகாய் : 2 கப்
தயிர்: 3/4 கப்
பச்சை மிளகாய்: 3
கடுகு: 2 ஸ்பூன்
தேங்காய் துருவல்: 1 கப்
இஞ்சி: 1 துண்டு
காய்ந்த மிளகாய் : 2
எண்ணெய்: 2 ஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிதளவு
உப்பு: தேவைக்கேற்ப
சீரகம்: 1ஸ்பூன்
செய்முறை:
வாணலி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,சீரகம் ஆகியற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
வெள்ளரிகாய் வெந்ததும், அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். மிதமான சூட்டில் வைத்து தயிர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாணலி சூடானதும் தேயிங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கி பச்சடியில் கொட்டி கலந்து விட்டு பரிமாறவும்.