Visitors have accessed this post 755 times.
பழிவாங்குபவன் – அன்டன் செக்காவ்
முன்னுரை
சிலிர்ப்பும் படபடப்பும் நிறைந்த ஒரு கதை ‘பழி வாங்குபவன்.
ஆனால் கதை எதிர்பாராத விதமாக முடிகின்றது. இக்கதை, கதை சொல்லும் திறனில் சிறந்த ரஷ்ய எழுத்தாளரான அன்டன் செக்காவால் எழுதப்பட்டுள்ளது .
1. முதல் திட்டம் – துப்பாக்கி வாங்கக் காரணம்
பீடர் சிகாவ் என்பவன் தான் கதையின் கதாநாயகன். ஒரு நாள் தன் மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதைக் கண்டு கொதிக்கிறான். எனவே தன் மனைவியையும் அவளது
காதலனையும் கொல்லத் தீர்மானிக்கின்றான். பிறகு தற்கொலை
செய்து கொள்ள முடிவெடுக்கின்றான். ஒரு துப்பாக்கி வாங்க ஆயுதங்கள் விற்கும் கடைக்கு வருகின்றான்.
2. இரண்டாம் திட்டம்
கடைக்காரர் காட்டிய துப்பாக்கிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவன் மனதில் புதிதாக ஒரு திட்டம் தோன்றியது. முதலில் மனைவியின் காதலனையும் தன்னையும் மட்டும் கொல்ல நினைக்கின்றான். தன் மனைவியைக் கொல்லும் திட்டத்தை கைவிடுகின்றான். அவமானத்தாலும் அசிங்கத்தாலும் அவள் சாகட்டும் என நினைக்கின்றான்.
3. அவனின் மூன்றாம் திட்டம்
சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுக்கு மற்றொரு எண்ணம் தோன்றுகின்றது. தன் சாவிற்குப் பிறகு தன் மனைவி அசிங்கப்படுவதை தன்னால் பார்க்க முடியாது என உணருகின்றான். எனவே
தன் திட்டத்தை மாற்றுகின்றான். காதலனைக் கொன்றுவிட்டு தான்
கைது செய்யப்பட வேண்டும் ‘என எண்ணுகின்றான்.
4. கடைக்காரரின் கதை
இப்பொழுது கடைக்காரர் அவனிடம் ஒரு கணவனின் கதையைக் கூறினார். மனைவி மற்று ஒருவனிடம் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள். காதலனையும் மனைவியையும் கணவன் கொல்கின்றான். கணவனை போலீசார் கைது செய்து சைபீரியாவிற்கு அனுப்புகின்றார்கள். தான் சாகும் வரை குளிரில் கணவன் துன்புறுகின்றான்.
5. அவன் கடைசித் திட்டம்
அந்தக் கணவனின் கதையைக் கேட்டவுடன் புதிய எண்ணங்கள்
சிகாவிற்குத் தோன்றின. காதலன் இறந்து தானும் சிறையில் இருந்தால் அவன் மனைவி சுதந்திரமாக வேறு யாரையேனும் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்வாள். எனவே விவாகரத்து தான் சரியான திட்டம் என எண்ணுகின்றான். தன் மனைவியை அவமானப்படுத்த விவகாரத்தினால் மட்டுமே முடியும்.
முடிவுரை
எனவே மிகக் கவனமான சிந்தனையால் தன் எல்லா கொலை திட்டங்களையும் கைவிடுகின்றான். எனவே துப்பாக்கியை வாங்குவதையும் விட்டு விடுகின்றான். காடைப் பறவை பிடிப்பதற்காக ஒரு வலையை மட்டும் வாங்கிக் கொண்டு தெளிந்த மனதுடன் கடையை விட்டுச் செல்கின்றான்.
https://pazhagalaam.com/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/