Visitors have accessed this post 688 times.

Pen பெண்

Visitors have accessed this post 688 times.

 

*பெண்.* 

 

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.

 

”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”

 

*கேள்வி*

 

ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்… (வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியை கேட்டு விட்டு, விடை சாென்னால்தான், நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).

 

தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.

 

கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

 

*அவள் சொன்னாள்.*

 

விடை சொல்கிறேன். அதனால், அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும். உனக்கு உன் நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

 

அவன் சொன்னான்.என்ன கேட்டாலும் தருகிறேன்.

 

சூனியக்காரக்கிழவி, விடையைச் சொன்னாள்.

  

தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே, ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.

 

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.

 

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதைக் கேள் என்றான்.

 

அவள் கேட்டாள் “நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

 

*அவள் சொன்னாள்.*

 

*”நாம்* வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்.

 

ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.

 

*இதில் எது உன் விருப்பம் ?” என்றாள்.*

 

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான். “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம், முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “முடிவை என்னிடம் விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.

 

*ஆம்…*

 

*பெண்,*

அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள்.

 

முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

 

*அனைவரும் புரிந்து செயல்படுங்கள்*

1 thought on “Pen பெண்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam