Visitors have accessed this post 343 times.
ஆரோக்கியமான தீபாவளி ரெசிபி (deepavali recipes ):
1.வெள்ளரி அல்வா (cucumber halwa ):
தேவையான பொருட்கள் :
மக்காச்சோள மாவு -1kg
சர்க்கரை :1kg
வெள்ளரி விதை :300 கிராம்
food colour :சிறிதளவு
நெய் :சிறிதளவு
செய்முறை :
- மக்காச்சோள மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கெட்டி பதத்திற்கு நன்றாக கரைத்து கொள்ளவும் .
- கனமான பாத்திரத்தில் பிசைந்த மாவை மிதமாக சூடாக்கவும்,லேசாக சூடானதும் சர்க்கரையை அதில் சேர்க்கவும் .இதை கெட்டியாக விடாமல் வேகமாக கலக்கி கொண்டே இருக்க வேண்டும் .
- கொதிக்க விட கூடாது.கொதித்து விட்டால் மிகவும் கெட்டி ஆகி விடும் .
- அதனால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிக்கொண்டேய இருக்க வேண்டும்
- அல்வா பதத்திற்கு வந்த பிறகு மீதியிருக்கும் சர்க்கரையை சேர்க்க வேண்டும் .
- பேஸ்ட் போல திரண்டு வரும் போது காய்ந்த வெள்ளரி விதைகளை பரவலாகத் தூவ வேண்டும் .
- இறுதியாக food கலர் சிறிது தூவி கலக்கிய பின் இறக்கி விட வேண்டும்.
சுவையான வெள்ளரி அல்வா ரெடி!
2.பிரவுன் ரைஸ் கீர் (brown rice kheer ):
தேவையான பொருட்கள் :
பிரவுன் ரைஸ் உடைத்தது :1/2கப்
பால் :4கப்
தண்ணீர் :2கப்
உலர்ந்த திராட்சை -6
பாதாம் துருவியது :ஒரு கை பிடி
ஏலக்காய் தூள் ,பட்டைத்தூள் ;1pinch
உப்பு :1 pinch
செய்முறை :
- உடைத்த அரிசியை ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் விட்டு கொதித்ததும் உடைத்த அரிசியை போடவும் .மிதமான தீயில் 10நிமிடம் வேகா விடவும் .
- பின் 4கப் பால் சேர்த்து அது 15 நிமிடம் நன்றாக வேக வேண்டும் .
- இது நன்கு வெந்து கஞ்சி பதம் வந்ததும் ,வறுத்த முந்திரி ,பாதம் துருவியது ,உலர்ந்த திராட்சை ,ஏலக்காய் தூள்,பட்டை தூள் ,உப்பு 1pinch சேர்த்து பரிமாறவும் .
- திராட்சை மற்றும் பாலில் உள்ள இனிப்பே போதுமானது .தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம் .
பிரவுன் ரைஸ் கீர் ரெடி !