Visitors have accessed this post 776 times.

உடற்பயிற்சியும் யோகாவும் ஆரோக்கியமும்

Visitors have accessed this post 776 times.

FITNESS   & YOGA   FOR HEALTH 

ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலை, எதிர்காலம், திருமணம் என்று ஆர்வமாக இருந்து வருகிறார்கள். ஆனால், அப்படி இருக்கும் நேரத்தில் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த தருணத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

உணவு பழக்க வழக்கம்:

தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் தவிர்க்கலாம்.

 

உடற்பயிற்சி:

தினமும் அதிகாலை எழுந்தவுடன் 20 முதல் 40 நிமிடம் வரை உடற்பயிற்சி  செய்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். அந்த 20 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது ஓட்டம் போன்றவற்றில் ஈடுபடுவது  நல்லது. இதன் காரணமாக உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் பருமன் பிரச்சனைகளும் தீரும்.

 

யோகா:

மன அழுத்தத்தில் இருந்து விடுபட தினமும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் இளமையாகவே இருக்கலாம்.

 

சரும பராமரிப்பு:

சருமத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியமான சருமம் நல்ல புத்துணர்வை தருவதால், சருமத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். ஒவ்வொரு பருவத்தின் போது சரும மாற்றம் ஏற்படும். இதனால் 20 வயதிலிருந்தே சருமத்தை சுத்தம் செய்தல், இறந்த செல்களை நீக்குதல் போன்றவற்றை தவறாமல்  செய்ய வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

 

டீ மற்றும் காபி பாதிப்பை ஏற்படுத்தும்:

கால்சியம் அதிகம் உள்ள பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது எலும்பு மற்றும் உடலை வலிமையாக்கும். அதேசமயம் டீ மற்றும் காபி போன்றவற்றில் கஃபைன் அதிகம் நிறைந்திருப்பதால், அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

பல் சுத்தம் அவசியம்:

உடலின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது முக்கியமான ஒன்று. இதனால் பல்லில் இருக்கும் மஞ்சள் கறை, வாய் துர்நாற்றம் போன்ற பல பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.

 

எல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் பயனில்லை. அத்தகைய, மகிழ்ச்சிக்கு அடிப்படை, ஆரோக்கியம் தான். 

 

`ஆரோக்கியம்’ என்றால் என்ன? `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது… 

 

‘உடலில் எவ்வித நோய் இல்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவர் ஆரோக்கியமானவர் என குறிப்பிட முடியும்’ என்கிறது.

அவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியம் அல்ல . இந்த விஷயம் பலருக்குத் தெரியாத காரணத்தால், தங்கள் உடலைப் பேணிக் காப்பது போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர்.

உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைவதால் மன ஆரோக்கியம் குறையும்; அதேபோல் மன ஆரோக்கியம் குறைவதால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.

 

விபத்து, நோய்த் தொற்று, ஜுரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுவதை போலவே, மனதுக்கும் பல்வேறு தீங்குகள் தினம் தினம் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. உதாரணமாக பிறரது கிண்டல் – கேலிப் பேச்சுகள், உறவினர் மற்றும் நண்பருடன் மனக்கசப்பு, நெருங்கியவர்களின் பிரிவு, விவாகரத்து, தோல்வி, குடும்பத்தில் பிரச்சனை போன்ற மன உளைச்சல் தரும் சம்பவங்களை சொல்லலாம்.

இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மன நோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதை தினம் தினம் பாதித்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ‘மனம்’ எனும் ஒரு விஷயம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால், பெரும்பாலும் இவை அனைத்தும் அலட்சியப் படுத்தப்படுகின்றன. ஆனால், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பல!

 

நம் உடலை இயக்கும் ஏழு சக்கரங்கள் என்னென்ன? அவை ஒவ்வொன்றும் என்ன செய்யும்?…

 

நமது உடலானது எண்ணற்ற ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதன் இயங்கு சக்தி நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இயற்கையின் இந்த பண்பானது நம்மை வியக்க வைப்பதுடன் மற்ற விலங்குகளைப் போல நாமும் சராசரியான விலங்குதான் என்ற பக்குவத்தை உருவாக்குகிறது.

 

உடலை பற்றி அறிந்து கொள்வதில் மனிதன் சலித்துப் போவதே இல்லை. ஆன்மா, உடல் மற்றும் மனமானது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் தரும் ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது. நமது முதுகு தண்டுவடத்தில் இருந்து தொடங்கும் சக்கரமானது நமது உச்சந்தலையில் நிறைவடைகிறது.

 

இந்த ஏழு சக்கரங்கள் தான் நாம் உயிர் வாழ்வதற்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணியாக திகழ்கிறது. இவற்றில் ஏதேனும் தடுமாற்றங்கள் நிகழும் போது நமக்கு நோய்கள் தாக்குகின்றன. உடலை கவனித்துக் கொள்வது என்பது இந்த சக்கரங்கள் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணிப்பது என்ற பொருளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

 

 

                 ​சக்கரம் – ஒரு விளக்கம்:

  

சக்கரம் என்பது வட்டம் என்று பொருள் தரக்கூடியது, இது சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய வார்த்தையாகும். இது உடலுக்கு தேவையான ஆற்றல் என்று பொருள்படுகிறது. இந்த ஏழு சக்கரங்கள் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மையமாக திகழ்கிறது. இது நமது உணர்வுகளை கட்டுப்படுத்த கூடியதாகவும் இயங்குகிறது. இந்த நம்பிக்கையானது இந்துத்துவம் மற்றும் புத்த மதத்தினர் மூலம் உருவானதாக நம்பப்படுகிறது.

 

​மனோ-தத்துவம்

                             

 

மனோதத்துவ பயிற்சி மேற்கொள்வது, யோகா தியானங்களில் ஈடுபடுவதன் மூலம் இந்த சக்கரங்களை கண்காணிக்க முடியும். ஒவ்வொரு சக்கரத்திற்கும் சில உடல் பாகங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உடல் பாகங்களின் இயங்கியல் மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த சக்கரங்கள் சுழற்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நாம் தொடர்ந்து மனோதத்துவ பயிற்சி மேற்கொள்ளும் போது உடல், மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

​ஏழு சக்கரங்கள் இருப்பிடம்

                                   

 

உடலிலுள்ள சக்கரங்களை பற்றி நாம் புரிந்து கொள்வதில் அவசியமான ஒன்று அதன் இருப்பிடங்கள் கண்டறிவதாகும். அதற்கு நாம் முறையான பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடலை ஆழ்ந்து நோக்குவதன் மூலம் சக்கரங்கள் இருப்பிடங்களை தெரிந்துகொள்ளலாம். இனி ஒவ்வொரு சக்கரங்கள் பெயரையும் அதன் பயன்களையும் பற்றி நாம் பார்க்கலாம்.

​மூலாதாரம்

நமது உடலில் முதுகு தண்டுவடத்திற்கு  அருகில் இருக்கும் இந்த சக்கரம்தான் நம் உடலையும் மனதையும் உயிரையும் இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை பெற்றிருக்கிறது அனைத்து சக்கரங்களிலும் இது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குவதற்கு இதுவே காரணமாகும். இந்த பூமியுடன் நம்மை இணைப்பதற்கான தொடர்பு சங்கிலியாக இந்த சக்கரம் மகத்தான பணியை செய்கிறது.

 

பூமியிலிருந்து ஆற்றலைப் பெற்று உடலுக்கு அனுப்ப கூடியதாக இந்த சக்கரம் பயன்படுகிறது. உயிர் வாழ்வதற்கான மகத்தான பணியை இது செய்வதனால் தான் தியானத்தில் இதன் பங்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த சக்கரத்தின் நிறமானது சிவப்பு நிறத்தில் இருக்கிறது.

 

சுவாதிஷ்டானம்

நமது உடலின் வயிற்று பகுதியில் இந்த சக்கரம் அமைந்துள்ளது. சரியாக சொன்னால் தொப்புளுக்கு சற்று கீழே அமைந்துள்ள இந்த சக்கரமானது மனித உணர்வுகளை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கிறது. நிணநீர்கணு என்று அழைக்கப்படும் உடலில் உள் உறுப்பானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது, உடலில் நோய் இருக்கும் பகுதியை கண்டறிவதிலும் முக்கிய பங்கு வகிக்க கூடியது ஆகும்.

அதை இந்த சக்கரத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உடலுக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய சுரப்பியாகவும் இந்த சக்கரம் செயல்படுகிறது. எனவே தான் கல்யாணம் ஆனவர்கள் இந்த சக்கரத்தை மேலும் தூண்டக் கூடியது யோகா ஆசனங்கள் மற்றும் தியானங்களில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றன.

இந்த சக்கரத்தை அதிகம் தூண்டி விடாமலும் கவனத்துடன் செயல்பட வேண்டியதாக யோகா  வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சக்கரத்தின் நிறமானது ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது.

மணிப்பூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் அதற்கு ஒரு பெயருண்டு. சுவாதிஷ்டானம் போன்று  தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது.

இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகின்றன. இந்த சக்கரமானது நமது சுய ஒழுக்கம், சுய தன்னம்பிக்கை மற்றும் வெற்றியை ஊக்குவிக்கக் கூடிய சக்கரமாக  இயங்குகிறது.

மேலும், இது ஒரு நுண் உணர்வுகளை உருவாக்குகிறது. அதாவது எதிர்காலத்தில் நமது உடல் மற்றும் உயிருக்கு எதிராக ஏதேனும் பிரச்சனைகள் வர இருக்கின்றன என்ற நுண் உணர்வு நமக்கு தரும் ஆற்றலை இந்த சக்கரம் பெற்றிருக்கிறது. இந்த சக்கரமானது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.

 

அனாகதம்…

இருதய சக்கரம் என்று அழைக்கப்படும் இந்த சக்கரமானது நமது நெஞ்சுப்பகுதியில் இருக்கிறது. காதல், அன்பு, நட்பு, பண்பு, உண்மை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய மற்றவர் தூண்டக்கூடிய சக்கரமாக இது இருக்கிறது. தைமஸ் சுரப்பி அதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கிறது. நமது மனதிற்கு தேவையான ஆற்றலை தரக்கூடியது இந்த நான்காவது சக்கரம் செயல்படுகிறது. இதன் நிறம் பச்சை.

 

விசுத்தி

ஐந்தாவது சக்கரம் இந்த சக்கரம் மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கிறது. உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பயன்பாடு இந்த சக்கரம் செய்கிறது அதாவது உங்களது பேச்சுத்திறனை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதன் நிறம் நீல நிறமாகும்.

 

ஆக்னா சக்கரம்:

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளை, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய உடல் உறுப்புகள் அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. உங்களை பற்றிம்   உலகத்தைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இந்த சக்கரம் பயன்படுகிறது. இந்த சக்கரத்தின் நிறமானது இண்டிகோ நிறத்தினை கொண்டிருக்கிறது.

 

சகஸ்ரஹாரம்:

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. ஏழாவது சக்கரமான இது இருப்பதிலேயே மிக வலிமையான சக்கரமாகும் சாதாரண மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியது இந்த சக்கரம் இருப்பதில்லை உச்சந்தலையில் இருக்கும் இந்த சக்கரமானது நம் உடலின் ஆற்றலை வானத்திலிருந்து பெற்றுத் தரக் கூடியதாகவும் இருக்கிறது புத்த நிலையில் இந்த சக்கரத்தை கட்டுப்படுத்தக்கூடியது நிர்வாணம் என்ற பெரிய நிலையை அடைந்தார்.

 

இந்தச் சக்கரத்தின் மூலம் தான் ஒருவர் ஞானத்தைப் பெற முடியும். பிரபஞ்சத்திற்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல் பகுதி அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

 

சூரிய நமஸ்காரம் செய்யும் போது செய்யும் 5 தவறுகள் என்னென்ன?

காலையில் எழுந்ததும் சூரிய பகவானை நோக்கி வணங்கி செய்யும் ஒரு ஆசனம் தான் இந்த சூரிய நமஸ்காரம் ஆகும். சூரிய நமஸ்காரம் செய்வதால் நம் உடலுக்கும் மனதுக்கும் அமைதி கிடைக்கிறது. ஆனால் இந்த ஆசனத்தை செய்யும் நிறைய பேர் சில தவறுகளை பின்பற்றுகின்றனர். அது எந்த மாதிரியான தவறுகள் அதை எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.

 

சூரிய நமஸ்காரம் உண்மையில் சக்தி வாய்ந்த ஒன்று. இது உடலுக்கும் மனதுக்கும் பயனளிக்க கூடிய ஒரு விஷயம். ஆனால் அதே நேரத்தில் இதை சரியாக செய்தால் மட்டுமே நம்மால் முழு பயன்களையும் அள்ள முடியும் என்கிறார்கள் யோகா வல்லுநர்கள். சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய வணக்கம் என்பது 12 சக்திவாய்ந்த யோக ஆசனங்களில் ஒன்று.

இது உடலிலும் மனதிலும் ஒரு சிறந்த, உற்சாகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை பெரும்பாலான மக்கள் எடை இழப்புக்காக செய்கிறார்கள். ஆனால் இதை சரியாக செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதைச் செய்யும் போது உங்கள் சுவாசம் மற்றும் அசைவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

எனவே இந்த சக்தி வாய்ந்த சூரிய நமஸ்காரம் எப்படி சரியாக செய்யலாம் என்பதை அறிவோம்.

 

​​

சுவாச உத்திகளை முறையாக பின்பற்றுங்கள்

 

                     

 

 

சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது சுவாசத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் உடல் அசைவுகள் மற்றும் உங்கள் சுவாசம் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.படிப்படியான பயிற்சி உங்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். எனவே படிப்படியாக சுவாச பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

 ​ஹஸ்த உத்தானாசனா வை தவிர்ப்பது

 

 

                    

சூரிய நமஸ்காரத்தின் போது ஒரு சுற்றில் ஹஸ்தா உத்தனாசனா இரண்டு முறை தோன்றும். இந்த ஆசனத்தின் முக்கிய நோக்கம் நம்முடைய முதுகெலும்புகளை சூடேற்றி பல படுத்துவதாகும். இது உங்கள் முதுகெலும்பின் முழு நீளத்திற்கும் ஒரு பெரிய நீட்டிப்பை அளிக்கிறது. மேலும் ஆழமாகவும் முழுமையாகவும் சுவாசிக்க உதவுகிறது.

 

எனவே ஒரு வேளை நீங்கள் ஹஸ்தா உத்தனாசனா வைத் தவிர்ப்பதன் மூலம், நீங்கள் சுவாசம் மற்றும் இயக்க சமநிலை பெற முடியாமல் போகலாம் . உங்கள் முதுகெலும்புக்கு தேவையான வலிமையும் நீட்டலும் கிடைக்காது என்கிறார்கள் யோகா வல்லுநர்கள்

 

 

 

                        

நான்கு-மூட்டு அமர்வு நிலை அல்லது தாழ்ந்த பிளாங் என்றும் அழைக்கப்படும் இந்த போஸுக்கு உங்கள் உடல் உள்ளங்கைகள் அல்லது கால் விரல்களின் ஆதரவுடன் தரையில் நேராகவும் இணையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தவறு செய்து உங்கள் முதுகெலும்புக்கு அழுத்தம் கொடுக்க நேரிடலாம். எனவே நீங்கள் அதை தவறாக செய்யும் போது, கீழ் உடல் தரையை நோக்கி மூழ்கி உங்களுக்கு முதுகு வலியைத் தருகிறது. எனவே அதைத் தவிர்க்க, உங்கள் வயிற்று மற்றும் மேல் உடல் தசைகளை கொண்டு ஈடுபட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

 

கோப்ரா நிலை

 

                    

கோப்ரா நிலைக்கும் மேல்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போன்ற நிலைக்குமிடையிலான குழப்பம். கோப்ரா நிலை மற்றும் மேல் நோக்கி எதிர்கொள்ளும் நாய் நிலை (உர்த்வா முக ஸ்வனாசனம்) ஆகியவை மிகவும் ஒத்தவை. எனவே இந்த இரண்டு யோகாசனங்களையும் குழப்பிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

மேலும் சூரிய நமஸ்காரம் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு கோப்ரா போஸ் செய்தால் உங்களுக்கு நல்ல பிடிப்பு கிடைக்கும் என்கிறார்கள் யோகா வல்லுநர்கள்.

அஸ்வ சஞ்சலாசனம் செய்யும் போது முன்னேற கூடாது

 

               

 

 

சூரிய நமஸ்காரத்தின் ஒரு சுற்று அது முடிவடைவதற்கு முன் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் நிலையில் இருந்து குதிரையேற்றம் நிலைக்கு மாறுகிறது. எனவே முடிவில் நீங்கள் முழங்காலை தெரியாமல் அதிகமாக நீட்டுவது முழங்கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் உங்கள் இடுப்புப் பகுதி ஒரு நெகிழ்வான தன்மையை தராது. எனவே இந்த மாதிரி செய்வது தவறு என்கிறார்கள் யோகா வல்லுநர்கள்.

 

எப்படி சரியாக செய்வது

 

            

 

 

உங்கள் முழங்கால்களை சிறிது நேரம் வளைத்து பின் உங்கள் பாதத்தை பின்னோக்கி நகர்த்தும். பொதுவாக சூரிய நமஸ்காரத்திற்கு என்று தனிப்பட்ட கவனம் யோகா பயிற்சியின் போது கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் அதை சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு சுவாசத்திலும் நிலையில் கவனம் செலுத்துவதை நோக்கி உங்கள் உடலும் மனமும் சீரமைக்கப்பட வேண்டும் என்கிறார் யோகா வல்லுநர்கள்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam