Visitors have accessed this post 742 times.
- காய்கறி இட்லி
- தேவையான பொருட்கள் :
- பொருள் – அளவு
- இட்லிகள் 15
- பெரிய வெங்காயம் 4 (நறுக்கியது)
- காய்கறிகள் 2 கப் (நறுக்கியது)
- தக்காளி3
- குடை மிளகாய் 3 (நறுக்கியது)
- வேக வைத்த பட்டாணி 2 கப்
- பு+ண்டு 5 பல்
- உப்பு தேவையான அளவு
- சாம்பார் பொடி 2 டீஸ்பு+ன்
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- கடுகு 1 டீஸ்பு+ன்
- உளுத்தம்பருப்பு 3 டீஸ்பு+ன்
- கறிவேப்பிலை 10 இலைகள்
- செய்முறை :
- 🍪 காய்கறி இட்லி செய்வதற்கு முதலில் இட்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
- 🍪 இதனுடன் பு+ண்டைத் துருவிப் போட்டு வதக்கவும்.
- 🍪 குடைமிளகாய், காய்கறிகள், தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
- 🍪 சிவப்பு நிறக் கேசரி கலரைக் காய்கள் வெந்தவுடன் சிறிதளவு தூவி கலக்கவும்.
- 🍪 கொத்தமல்லி இலைகளைத் தூவவும்.
- 🍪 இட்லிகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி, காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 🍪 இப்போது சுவையான சு+டான காய்கறி இட்லி ரெடி.