Visitors have accessed this post 757 times.
பகுதி 2
அப்பா எழுந்திரிங்க எல்லாரும் பட்டாசு வெடிக்கிறார்கள்,எழுந்திரிங்க அப்பா நானும் பட்டாசு வெடிக்க வேண்டும். என்று சொல்லியபடியே அப்பாவை உலுக்கிக் கொண்டிருந்தான். சீனு!சரி போலாம் போலாம் என்று களைப்புடன் எழுந்தான் ராமு. உடனே அம்மா! ஆமா,இன்னும் குளிக்கவே இல்ல அதுக்குள்ள அப்பாவும் பையனும் கிளம்பிட்டாங்க பட்டாசு வெடிக்க. போய் குளிங்க அப்புறமா பட்டாசு வெடிக்கலாம்,என்று ராமுவை பார்த்த படி ஒரு புன்னகையுடன் சமையல் அரைநோக்கி சென்றாள்,அந்த ஏழ்மையிலும் அவர்கள் ஆனந்தமாக தீப ஒளி திருநாளை களித்தனர்.அன்றிரவு ராமுவின் மனைவி அவனிடத்தில் ஒரு சந்தோஷமான தகவல் பரிமாற காத்திருந்தாள்.ராமு வீட்டின் திண்ணையில் அமர்ந்து காலை விடியல் எப்படி இருக்க போகுதோ,என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான். காலையில் கடன்கார முருகேஷ் அண்ணே வந்துருவரே எல்லா பணமும் சீனுக்கும்,வீட்டுக்கு மளிகைப்பொருள் வாங்கி இப்ப வெறும் 22ரூபாய் தான் இருக்கு அவருக்கு 28.50ரூபாய் தரணுமே அப்படி சிந்தித்தப்படி. அவன் வீட்டின் பக்கம் இருந்த கோவிலில் தரும் சக்கரைபொங்கலுக்கு ஒரு பிச்சையெடுக்கும் மனிதர் கையேந்தும் நிகழ்வை பார்த்து என்னதான் கடவுளா இருந்தாலும் கையேந்துன தான் கிடைக்கும் எதுவா இருந்தாலும்! என்று சிறு கண்ணீருடன் சிரித்தான்.
தொடரும்.
காலையில் கடனுக்கு என்ன செய்ய போகிறான். மனைவி சொல்ல நினைப்பது என்ன?
விரைவில் பகுதி3.,
Interesting bro waiting part 3
https://pazhagalaam.com/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/