தனிமை பேசும் மொழி

Visitors have accessed this post 162 times.

பகுதி 4

       இராமு நா யாருக்கும் இவ்வளோ தொகையை கடனா குடுத்தது இல்ல, நீ அண்ணே பண்டிகை வருது இன்னும் சம்பளம் தரலா நீங்க கொஞ்சம் உதவி செய்தால் நல்ல இருக்கும். அப்படி கேட்ட, அதுனால மட்டும் குடுத்தேன் என்ன பத்தி உனக்கு தெரியும் லா சரியான நேரத்துக்கு மொத்தமா குடுக்க பாரு. இதை நினைத்த படி சுவரில் அந்த நான்கு ரூபாயை இருக்க பிடித்து நின்றுகொண்டு மீதம் பணத்திற்கு என்ன செய்ய, என்று தன் மனைவி சொன்ன அந்த சந்தோஷமான செய்திய கூட நினைக்காமல் முருகேஷ் அண்ணா என்ன சொல்லுவாரு இந்த நான்கு ரூபாயை எடுத்து கொள்ளலாமா, வேணாமா என்று ஆழ்ந்த யோசனையில் சரி பக்கத்துல போய் பார்போம் அந்த முதியவர் இருப்பாரா என்று, அவன் வீட்டில் இருந்து சற்று தூரம் தள்ளி போக, குளக்கரையில் அந்த முதியவர் குளித்துக்கொண்டு இருந்தார்!அவரின் அருகில் செல்லும் நேரம்,கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீடு திரும்பும் போது, இராமு  எதிர் திசையில் வருவதை பார்த்து என்ன இராமு ஏதோ தயக்கத்தோடு இருக்க போல என்று கேக்க அட ஏன் பூசாரி நீங்க வேற அப்படினு நடந்த விசயத்தை பூசாரியிடம் சொன்னான் புரியுது இராமு அந்த முதியவர் பிச்சைக்காரர் இல்ல கோவில்லா பூ கட்டும் நபர்.அந்த வேலையை அவர் சேவையாக செய்கிறார்.விருப்பம் இருக்குற சில நபர்கள் சிறு சிறு பண உதவி செய்வார்கள், ஆனால் அவர் அதை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை யாராவது கஷ்ட படுவதை அவர்  பார்த்தால்  அவங்களுக்கு தெரியாம பண உதவி செய்வார்.சரி விடு,  நல்லது தான் நடந்து இருக்கு அப்படி நினச்சு அத சேத்து அந்த கடன் வாங்கிய நபருக்கு குடு. அதுக்கு இன்னும் 2.50ரூபாய் வேணும் பூசாரி, என்ன செய்யானு தெரியல. இருக்குற பணத்த குடுத்து மீதி பணத்து தகுந்த காரணம் சொல்லு,சரி இராமு ஆத்துக்கு போனும் நேரம் ஆச்சு வரேன். சரி பூசாரி போய்ட்டு வாங்கணு சொல்லி வீடு திரும்பினான். வீட்டின் உள்ளே வர மனைவி என்னங்க இப்படி சோகமா எதையோ நினைச்சுக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு. சரி சம்பளம் எப்ப வரும் அம்மாவ பார்க்க போனும் அம்மா கிட்ட சொல்லாலும் எப்ப போலாம் சொல்லுங்க என்று கேக்க போலாம் போலாம் சொல்லி அமைதி படுத்தினான். உடனே சீனு அப்பா இந்த அப்படினு கையை காட்ட இராமு சிரித்தான்.

தொடரும்.

சீனு குடுத்தது என்ன?முருகேஷ் அண்ணனின் கடன் அடைப்படுமா?

விரைவில் பகுதி5

Leave a Comment

Write and Earn with Pazhagalaam