தனிமை பேசும் மொழி

Visitors have accessed this post 153 times.

பகுதி 5

       ரவி பட்டணத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது சொந்த ஊர் ஆன ராஜசிங்கமங்கலத்திற்கு வந்தான். பேருந்தில் இருந்து கீழே இறங்கி தனது வீட்டிற்கு செல்லும் பொழுது சீனு தனது நண்பர்களை பார்த்து விட்டு வீடு திரும்ப சீனுவை ரவி பார்த்தான். ஏய்! சீனு நில்லு எங்க போற. ரவி அண்ணே, வாங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு .ஆமா சீனு,அண்ணே டாக்டர்க்கு படிக்க பட்டணத்துக்கு போய்ட்டு இப்பதான் வரேன்.சரி,அப்பா எப்படி இருக்காங்க, எங்க அப்பாவும் உங்க அப்பாவும் நல்ல நண்பர்கள்.ஆமா அண்ணே, அதுதான் அப்பா, முருகேஷ் மாமா கிட்ட அப்பா தீபாவளிக்கு எனக்கு,அம்மாக்கு புது துணி எடுக்க காசு வாங்கிட்டு வந்தாங்க அண்ணே. சரி தீபாவளி எப்படி போச்சு, உன்னோட தீபாவளி டிரஸ் இதுவா. ஆமா அண்ணே எப்படி இருக்கு, நல்ல தான் இருக்கு.சரி இந்த உன்னோட தீபாவளி பரிசு.அப்படினு தனது புத்தக பையில் இருந்து ஒரு கதை புத்தகத்தை எடுத்து குடுத்து விட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பினான்.சீனு அந்த கதை புத்தகத்தை வாங்கிகொண்டு வீடு திரும்பினான். எறும்பு உணவை சேகரிப்பதை பார்த்து விட்டு தனது அறைக்குள் சென்று ரவி அண்ணே குடுத்த புத்தகத்தை புரட்டிகொண்டு இருந்தான் அதில் 45ஆம் பக்கம் 2ரூபாய் காகிதமும் 1ரூபாயை காகிதமும் இருக்கா. அதை அப்பா இதாங்க என்று காட்ட விளையாட்டு பண காகிதம் என்று நினைத்து சிரித்தான். உடனே சீனு அப்பா ரவி அண்ணே புத்தகம் குடுத்தாங்க அதில் இந்த பணம் இருந்தது. என்று ரவி அண்ணாவை பார்த்த விசயத்தை இராமுவிடம் சொன்னான்.ஒரு பக்கம் அவனின் கடன் தொகை அடைக்க வந்து விட்டது என்று நிம்மதி அடைந்தான். ஆனால் ஒரு பக்கம் சிறு பயத்துடன் யோசித்து கொண்டே  அன்று இரவை கழித்தான். காலையில், இராமு என்று சத்தமிட இதோ வந்துடேன் அண்ணே அப்படினு வெளிய வந்து முருகேஷ் அண்ணனிடம் பணத்தை தர.

தொடரும்.

முருகேஷ் அண்ணனிடம் உண்மையை இராமு சொல்லுவான? ரவி செய்தது உதவிய அல்லது தவறுதலாக தரப்பட்ட பணமா?

விரைவில் பகுதி6,

Leave a Comment

Write and Earn with Pazhagalaam