Visitors have accessed this post 758 times.
பகுதி 6
வாசலில் வந்து நின்ற ரவியை பார்த்த முருகேசன். வா ரவி, படிப்பு முடிஞ்ச,வரேன் அப்படினு ஒரு வார்த்த கூட சொல்லலா. சரி உள்ள வா என்று ரவியை வீட்டின் உள்ளே அழைத்து சென்று. அன்று இரவு இருவரும் உணவு உண்டுவிட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ரவி முருகேஷனிடம்,அப்பா இராமு மாமா எப்படி இருக்காரு. உங்ககிட்ட கடன் வாங்கினார, வரும் போது சீனு வா பார்த்தேன். அந்த குட்டி சொன்ன முருகேஷ் மாமா பரிசு குடுத்தார். தீபாவளிக்கு, அப்படினு நீங்க கடனா குடுத்த பணத்த சொன்ன. ஏன் அப்பா இராமு மாமா நா படிக்க நம்ம இந்த நல்ல நிலைமைக்கு வர எவ்வளோ உதவிய இருந்தாங்க. அவருக்கு நீங்க கடனா தந்தது தப்பு அப்பா.யோசிச்சு பாருங்க நம்ம அவருக்கு எவ்வளோ தருணும். அதுனால திரும்ப கேக்க வேணாம் அப்பா என்று முருகேஷனிடம் சொல்லிவிட்டு. தனது அறைக்குள் உறங்க சென்றான் ரவி. ரவி சொன்னதை நினைத்தப்படி முருகேசன் உறங்க சென்றான். காலை விடிய முருகேசன் கடன் பணம் வசூலிக்கும் வேலைக்கு சென்றான். இராமுவின் வீட்டை நெருங்கினான். இராமு என்று குரல் தர இராமு வெளியே வந்து. அவனிடம் இருந்த 22 ரூபாயை அண்ணே இந்தங்கா என்று குடுத்து, முருகேஷ் அண்ணனின் கையை பிடித்து அண்ணே ரவி ஊர் லா இருந்து வந்து இருக்க. சீனு சொன்னா அப்புறம் அண்ணே மீதி 6:50 ரூபாயை சம்பளம் வாங்குனதும் தரேன் அண்ணே. அதோட ரவி நேத்து சீனுக்கு குடுத்த புத்தகத்தில் 3ரூபா இருந்துச்சு இந்தாங்க அண்ணே .அப்படினு 25ரூபாயை தந்தான். அந்த நேரம் கோவில் பூசாரி அங்கே வர.
தொடரும்.
முருகேஷ் அண்ணே அவன் சொல்லுவதை ஏற்றுக்கொள்வார? பூசாரி இராமுவிடம் இருக்கும் முதியவர் குடுத்த பணத்தை முருகேசனிடம் சொல்லுவார?
விரைவில் பகுதி 7
https://pazhagalaam.com/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/