Visitors have accessed this post 638 times.
பகுதி 7
அடுப்பில் இருந்து பாத்திரத்தை பங்கஜம் பூசாரியின் மேல் வீச! ஏன் டி,உங்கிட்ட சொன்னதுக்கு இப்படித்தான் பாத்திரத்தை கொண்டு தூங்கி போடுவிய, ஆமா அந்த பிச்சைக்காரன் கிட்ட எத்தனை தடவை நீங்க பணம் கேட்டிங்க குடுத்தன இப்ப அந்த இராமுக்கு மட்டும் குடுத்து இருக்கான், ஏய் அவர அவேன் இவன்னு பேசாத அவர் வயதில் பெரியவர்.இப்ப என்ன உனக்கு. எனக்கு என்ன?பிள்ளைக்கு ஒரு பலகாரம் வாங்கி குடுக்க கூட வக்கு இல்ல வந்துட்டாரு, எனக்கு மரியாத சொல்லித்தர. ஒழுங்கா கோவிலுக்கு போற வேலைய பாருங்க. பங்கஜம் சொன்னதை நினைத்த படி மெதுவாக சைக்கிளை உருட்டிக்கொண்டு இராமுவின் வீட்டின் வழியே கோவிலுக்கு வந்துக்கொண்டு இருந்தான் அந்த நேரம் முருகேஷ் அண்ணனும் இராமுவும் பேசுவதை பார்த்து. இராமுக்கு முதியவர் குடுத்த அந்த 4ரூபாயை பற்றி முருகேஷ் அண்ணனிடம் சொல்லிவிடலாம் என்று. சைக்கிளை வேகமாக ஏறி மிதிக்க தொடங்கினான். முருகேசன் இராமுவின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க! அங்கு வந்த பூசாரி என்ன முருகேஷ் அண்ணே தொழில்லாம் எப்படி போகுது இராமு ஏதோ உங்ககிட்ட கடன் வாங்கி இருக்கேன் அப்படினு சொன்ன. என்ன இராமு பணம் கம்மிய இருக்கேனு தயங்குற மாதிரி தெரியுது. என்று நக்கல் செய்த படி. நா என்ன சொன்னே அந்த முதியவர் குடுத்த பணத்த சேர்த்து 26ரூபாய குடு மீதி பணம் சம்பளம் வந்ததும் தரேன் அப்படினு சொல்லு தானா சொன்னே. நீ ஏன் தயங்குர, உடனே முருகேஷ் அண்ணே அட போ பூசாரி என் பையேன் குடுத்த பணத்தையே வேணானு திரும்ப குடுத்துடன். இதுல அந்த பூ கற்றவர் வேற உதவி செய்தார். சரி நா பாத்துக்கிறேன். போய் கோவில் பூஜா வேலைய பாரு என்று சொல்லி பூசாரியை கேலி செய்தார்.அதை கேட்டு சரி வரேன். அப்படினு அங்கிருந்து கடித்துக்கொண்டு சென்றார் பூசாரி. இராமு,இந்த பணத்த நீயே வச்சுக்கோ என் பையன் சொன்னதுக்கு அப்புறம் தான் புத்திக்கு எட்டுச்சு மன்னிச்சிடு. என் தங்கச்சி திலகவதி என்ன பண்ற. அவ அவங்க அம்மா வீட்டுக்கு போனுமா அண்ணே. உங்ககிட்ட ஒரு நல்ல விசயம் சொல்லணும் திலகவதி உண்டாகிருக்க என்று சொன்னதும். இராமு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு உடனே அவளா அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போ ஏதாவது உதவின உடனே ஒரு தகவல் குடு உனக்கு முருகேசன் அண்ணே இருக்கேன்.திலகவதி தண்ணீர் கொண்டு முருகேசனுக்கு குடுக்க. பாத்து சூதனமா இருக்கணும் இராமு உங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போவான் சரியா நா கிளம்புறேன். என்று சொல்லி முருகேசன் கிளம்ப இராமுவிற்கு சந்தோஷம் தாங்க முடியல சரி சாப்பாடு எடுத்து வை என்று சொன்னா படி உள்ளே போக.முதியவர் வாசலின் முன் வந்து நிற்கிறார்.
தொடரும்
முதியவரின் வருகைக்கு காரணம் என்ன? மறந்த உண்மை வெளிப்படும்!
பின்வரும் பகுதிகளில்..,
https://pazhagalaam.com/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/