Visitors have accessed this post 800 times.
- நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதுவே கடவுளைப்பற்றி தியானம் செய்ய பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும்.
- வடக்கு முகமாக உட்கார்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து மௌனமாக தியானத்தை செய்து வர, நாள் ஆக ஆக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சி செய்யுங்கள்.
- யோகாசனத்தில் உள்ள சிரசாசனம் மற்றும் சர்வாங்காசனத்தையும் செய்து முடியுங்கள்.
- பிராணாயாமத்தை 20 தடவைகள் செய்யுங்கள்.
- தியானத்திற்கு தனி அறையை ஒதுக்குங்கள்.
- ஆன்மீக கருத்துக்கள் மற்றும் தெய்வீக கருத்துக்களை 30 நிமிடம் படியுங்கள்.
- பிரார்த்தனை கீதங்கள் மற்றும் ஸ்லோகங்களை மனனம் செய்து தியானம் செய்ய உட்காருவதற்கு முன் சொல்லுதல் மிக மிக நன்மை பயக்கும்.
- வாரம் ஒருநாள் அல்லது மாதம் ஒருநாள் மௌன விரதம், உண்ணா நோன்பு இருங்கள்.
- தலைக்கு தலையணை வைத்து தூங்காதீர்கள். தலையணையை என்றுமே வைத்துக்கொள்ளாதீர்கள்.
- உண்மையே பேசுங்கள் எப்போதும் பொய் பேசாதீர்கள் .தெளிவாகப் பேசுங்கள்.
- ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து வாழ்ந்திடுங்கள். தேவையற்ற வேலைகளுக்கும் குழப்பங்களுக்கும் மனதில் இடம் கொடுக்காதீர்கள்.
- மனதாலும், உடலாலும் தீங்கு செய்யாதீர்கள். எதிரிகளுக்கும் நன்மையே செய்து காட்டுங்கள் .ஈ எறும்புக்கு கூட தீங்கு செய்யாதீர்கள்.
- முன்செய்த தவறுகளை யோசித்து, மேலும் தவறுகள் செய்யாவண்ணம் செயல்படுங்கள்.
- ஒவ்வொரு நிமிடமும் இறைவனை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். கடமையைச் செய்வதில் பின்வாங்காதீர்கள்.
- இறைவனை ஒரு போதும் நிந்திக்காதீர்கள். அவர் கருணைக்கடல். அன்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு எல்லோர் உள்ளங்களிலும் வீற்றிருப்பவர்.
- மனிதப் பிறவியிலிருந்து இறைவனின் மோட்சப்பாதைக்குச் செல்வதற்கு இதுவே “திறவுகோல்” ஆகும்
கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் முட்கள் கால்களில் ஏறிவிடாமல் உயர்வான பாதைக்கு, ஓங்கிய பாதைக்கு வழிவகுத்துச் செல்லுங்கள்.
இதுவே ஞானிகள், மனிதர்களுக்கு வழிகாட்டிச் சென்ற பாதையாகும். இதுவே உண்மை. உண்மை நிலைக்கு பாடுபடுவோம் என சங்கற்பம் எடுத்துக் கொள்வோமாக.