Visitors have accessed this post 469 times.

நானே வருவேன் – பகுதி 10

Visitors have accessed this post 469 times.

 பாகம் 10

 

தூக்கத்திலிருந்து கண்விழித்த வீரராகவனுக்கு அவனுடைய அம்மா நேற்று இரவு பயந்து நடுங்கியது நினைவிற்கு வந்தது. சட்டென எழுந்தவன் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தட்டினான் கதவு பூட்டப் படாமல் இருக்க அது தானாகவே திறந்து கொண்டது உள்ளே யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு வேகமாக கீழே இறங்கி வந்தான்.

செல்வியின் குரல் பூஜை அறையில் இருந்து வெளிப்பட அங்கே வேகமாக சென்றான். உள்ளே தன் அம்மா தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு இசைப் பாமாலையை மனம் லயித்து இசைத்துக் கொண்டிருந்தார். கண்ணை மூடி கேட்டுக் கொண்டு அங்கேயே நின்றான் அவன்.

 

தன் பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த செல்வி கண்ணை மூடிக்கொண்டு நிற்கும் வீரராகவனைப் பார்த்து “என்னடா? குளிக்காம இப்டி பூஜ ரூமுக்கு முன்னாடி வந்து நின்னுட்டு இருக்க” ,  “நா ஒங்கள தேடித்தாம்மா வந்தே” ,  “எது என்ன தேடுனியா? அதிசயமா இருக்கு” ,  “ஏம்மா நா ஒங்கள தேடக் கூடாதா” ,  “நான் அதுக்கு சொல்லலடா எப்பவு எந்திரிச்ச உடனே சட்டுபுட்டுன்னு கெளம்பி ஆபீஸ்க்கு போயிருவியே அதா கேட்டே” .

 

“நேத்து நைட்டு நீங்க மயங்கி கெடந்தத பாத்தவ்னே நா ரொம்ப பயந்து போயிட்டேம்மா என்னாச்சும்மா உங்களுக்கு? நேத்து நைட்டு நீங்க அப்பா கிட்ட யாரைப் பத்தி கேட்டுட்டு இருந்தீங்க?  ” . இதை பற்றி பேச விரும்பாத செல்வி “அது ஒரு கெட்ட கனவு அதப் பத்தி இனிமே பேசாத சரி போ போய் குளிச்சிட்டு வா ஒனக்கு நா டிஃபன் ரெடி பண்ணி வைக்கிறே” .

“நீங்க எதுக்குமா சிரமப் பட்றீங்க ராதாக்காவ செய்ய சொல்லுங்க இன்னக்கி எல்லாரு சேந்து சாப்டுவோ” , “சரிப்பா” . தன்னுடைய அறைக்குச் சென்று தூய்மைப் பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்ல தயாராகி உணவு உண்ணும் இடத்திற்கு வந்தான்.

சமைத்த உணவுகளை செல்வியும் ராதாவும் சேர்ந்து மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். வீரைப் பார்த்தவுடன் செல்வி “வா வந்து ஒக்காந்து சாப்டு” என நாற்காலியை நகர்த்தினாள். “அப்பா எங்கம்மா காலையில இருந்து அவர நா பாக்கவேயில்ல” ,  “அவரோட ஒரு முக்கியமான ஃபிரண்டா பாத்துட்டு வரேனு காலைலே கெளம்பி போய்ட்டாரு” ,  “யாரும்மா அந்த முக்கியமான ஃபிரண்டு? ” ,  “தெரியலப்பா அவர் வந்தவ்னே யாருன்னு நீயே கேட்டுக்கோ” எனக்கு அதைப் பற்றி தெரியாது என்பதைப் போல் பதில் வர அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான் வீரராகவன்.

“நீங்களூ வந்து ஒக்காந்து சாப்டுங்கம்மா” ,  “இல்லப்பா நீ சாப்டு நா ராதா கூட சேந்து சாப்டுக்குறே, ஏம்பா அந்த பொண்ணு ரஞ்சிதாவ வேணான்னு சொல்லிர்லாமா? ” ,  “ஏமா திடீர்னு இந்த முடிவு? ” ,  “இல்லப்பா கல்யாணத்துக்கு முன்னாடியே லவ்வு.. அது இதுன்னு..” .

“அதெல்லா ஒரு பெரிய பிரச்சனயே இல்லம்மா இந்த விஷயத்த எல்லா அந்த பொண்ணு சொல்லாம மறச்சு அத நாம கண்டுபிடிச்சுருந்தாதா அது பெரிய தப்பு ஆனா அந்த பொண்ணு ஜென்யூனா எல்லாத்தையு கல்யாணத்துக்கு முன்னாடியே ஓப்பனா சொல்லீட்டாங்க, இன்னூ அந்த பொண்ணு அவன பிரேக் அப் பண்ணதுக்கு சொன்ன காரணத்த கேட்டீங்கன்னா நீங்களே நிச்சயமா அந்த பொண்ண வேணான்னு சொல்ல மாட்டீங்க”

“நீ இவ்ளோ சப்போர்ட் பண்ற அளவுக்கு அப்படி என்ன பெரிய காரணத்த சொன்னா அவ? ” ,  “எனக்கு ஏ லவ்வ விட ஏ அப்பா தா ரொம்ப முக்கியோன்னு சொன்னாங்க” ,  “அப்படியா சொன்னா! ” “ஆமம்மா” இதைக் கேட்டு சற்று யோசிக்க ஆரம்பித்தாள் செல்வி.

சாப்பிட்டு முடித்தவன் தன் அன்னை ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து “நா நம்ம அசிஸ்டன்ட் ரமேஷ விட்டு அந்த பையனப் பத்தி விசாரிக்க சொன்னே அவனூ எந்த கெட்ட பழக்கமு இல்லாத நல்ல பையந்தா அப்படிப்பட்டவனையே அந்த பொண்ணு தன்னோட பேமிலிக்காக வேண்டான்னு சொல்லிருக்காங்க அவங்க ஒங்களுக்கு மருமகளா வந்தா நம்ம குடும்பத்த எப்படி பாத்துக்குவாங்கன்னு யோசிச்சு பாருங்க, இதுக்கு மேல நீங்க என்ன முடிவு எடுத்தாலூ சரிதா” என்று கூறிவிட்டு மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

“அம்மா, தம்பி சொல்றத யோசிச்சு பாத்தா சரீனுதா படுது இந்த காலத்துல யார் தா லவ் பண்ணாம இருக்கா நண்டு சுண்டு கூட லவ் பண்ணீட்டு திரியிது இது வெவரோ தெரிஞ்ச புள்ள ஏதோ வயசு கொலார்ல பண்ணிருச்சு இதெல்லா ஒரு பெரிய விஷயமா? அதுவு இல்லாம அந்த பொண்ணு தா அவன கட் பண்ணி விட்டுருச்சாமே, அதவிட ரொம்ப முக்கியமான விஷயோ நம்ம வீர் தம்பிக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு போல அவரு பேசீட்டு போறதப் பாத்தா அப்படித்தா தெரியிது” ராதாவின் அபிப்பிராயத்தை கேட்டுக் கொண்டிருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் சிறு புன்னகையை உதிர்த்தாள்.

ஆள் அரவமற்று பார்ப்பவரை பயமுறுத்தும் வகையில் விசாலமாக இருந்த மயானத்தின் வலது பக்கத்தில் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த கல்லறையின் முன்பு கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்திக் கொண்டு நின்றிருந்தார் செல்வராகவன்.

அந்த இடத்திற்கு வெட்டியானும் காவல்காரனும் வந்தனர். அதில் வெட்டியான் “என்ன சார் உங்க வைஃபா?” என அவரிடம் கேட்க இல்லை என தலையாட்டியவரிடம் “லவ்வரா? ” அதற்கும் இல்லை என தலையாட்டினார். அப்போ “அக்கா தங்கச்சியா” என குறுக்கிட்டான் காவல்காரன். “அட யார்ரா நீ? அக்கா தங்கச்சி சமாதிக்குப் போய் எவனாவது ஹாட்டின் போட்ட பொக்கே வப்பானா? என்ன சார் டாவா? ” இதைக் கேட்டதும் துக்கம் மறந்து அவர் சிரித்து விட்டார்.

“பாத்தியா நா கரெக்டா சொல்லிருக்கே சார் சிரிச்சிட்டாரு பாரு? ” ,  “இதுக்கு முன்னாடி இங்க வேல பாத்தவர் எங்க? ” , “அந்த சாமி கண்ணுக்கு வயசாயிடுச்சின்னு ரிட்டயர் மென்ட்  கொடுத்துட்டாங்க சார்” ,  “ஓ..” என்றவர் தன்னுடைய கால் சட்டைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்து அவன் முன்பு நீட்டி “இந்த சமாதிக்கு டெய்லி பூ வாங்கி வை சரியா ? ” ,  “சரி சார் இந்த காசு தீர்ர வரைக்கூ வைக்கிறே” என்று கூறிக்கொண்டே அந்த காசை வாங்கிய வெட்டியானின் கையைப் பிடித்து “காசு தீந்து போச்சுனா ஏ நம்பருக்கு போன் பண்ணு” என்று தன் கண்களை விரித்து அவனை உற்றுப் பார்த்து கூறினார்.

இதைப் பார்த்த வெட்டியான் சற்று பயந்து கொண்டே “சரிங்க சார் ஒங்க நம்பரக் குடுங்க என்று தன்னுடைய அலைபேசியை எடுத்து அவருடைய அலைபேசி எண்ணை தட்டச்சு செய்து அதை கொலைகாரன் என சேமித்து வைத்துக் கொண்டான்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam