Visitors have accessed this post 438 times.

நானே வருவேன் – பகுதி 4

Visitors have accessed this post 438 times.

பாகம் 4

இரவு உணவிற்காக அருளும் ரஞ்சிதாவும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தார்கள். ரஞ்சிதா நொடிக்கொரு முறை தன் அப்பா என்ன சொல்லப் போகிறாரோ என்று திரும்பித் திரும்பி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டும் காணாததைப் போல அருளும் மௌனமாக அமர்ந்திருந்தார்.

 

இரவு உணவை எடுத்துக்கொண்டு மேஜைக்கு வந்த வைஷ்ணவி தயாராக இருந்த இருவருடைய தட்டிலும் உணவை பரிமாறி விட்டு தானும் அமர்ந்து உன்ன ஆரம்பித்தார். “இப்போ வந்திருக்க சம்பந்தோ ரொம்ப பெரிய எடோ நா நல்லா விசாரிச்சிட்டே பையே ரொம்ப தங்கமான பையே எந்தவிதமான கெட்ட பழக்கமு கெடையாது கூட ஒர்க் பண்ற பொண்ணுங்க கிட்ட கூட அளவாதா பேசுவாரு ஒங்க ரெண்டு பேத்துக்கூ இதுல சம்மதந்தான” என்று பேச்சை சுற்றி வளைக்காமல் நேராக இருவரிடமும் அவர்களுடைய விருப்பத்தைக் கேட்டார் அருள்.

 

“எனக்கு அவங்க ரெண்டு பேரையூ பாக்கும் போது ரொம்ப நல்லவங்களாதா தோணுது ஓ கிட்ட தனியா பேசணும்னு சொன்னாங்கல்ல அப்படி என்னதா பேசுனிங்க ரெண்டு பேரூ” என்று பதிலும் கேள்வியுமாக தன்னுடைய உரையாடலை முடித்தாள் வைஷ்ணவி.  

 

“நானே அவங்க அப்டி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலம்மா திடீர்னு எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு நீ தா ஏ மருமகன்னு சொல்லீட்டாங்கம்மா இதுவரைக்கூ நா ஒங்க பையன பாத்தது கூட இல்லன்னு சொன்னா போட்டோவ டேபிள்ல வச்சு உனக்கு கண்டிப்பா ஏ பையன பிடிக்கும்னு அவளோ கான்ஃபிடன்ட்டா சொல்றாங்கம்மா இவங்க இவ்வளவு அவசரப்பட்றத பாத்தா எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு” என்று தன் எண்ண ஓட்டத்தை கொட்டித் தீர்த்தாள் ரஞ்சிதா.

 

“இதுல பயப்பட்றதுக்கெல்லா ஒன்னூ இல்லமா நானே அந்த பையன ரெண்டு மூணு வாட்டி நேர்ல பாத்திருக்கே ஆள் நல்லா ஜம்முன்னுதா இருப்பா இந்த பையனோட ஜாதகத்துல 30 வயசுல கல்யாணம் ஆகலன்னா அதுக்கப்பறோ எப்பவூ கட்ட பிரம்மச்சாரிய வாழ்வார்ன்னு இருக்கா அதனால தா அவங்க அம்மா இவ்வளவு அவசரப்படுறாங்க” என்று தன் மகளை பார்த்து விளக்கம் கொடுத்தார் அருள்

 

தன்னுடைய அப்பா தன்னை பார்த்து பேசியதும் ஆனந்தத்தில் ரஞ்சிதாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அருள் சாப்பிடுவதை விட்டு எழுந்து வந்து அவள் தோள் பட்டையை பிடித்து “என்னமா என்னாச்சு ஏமா இப்டி அழுகுற? வயிறு ஏதாவது வலிக்குதா? டாக்டர வர சொல்லவா?” என்று பதட்டத்துடன் கேள்விகளை அடுக்கினார்.

 

ரஞ்சிதா இல்லை என தலையை ஆட்டிவிட்டு அழுது கொண்டே “ஒங்களுக்கு ஏ மேல கோவோ இல்லையாப்பா” என்று கேட்டாள் “நா எதுக்குமா ஓ மேல கோபப்பட போறே நீ செஞ்ச காரியத்துனால எனக்கு ஓ மேல சின்ன வருத்தந்தா அதையூ நீ எனக்கு விருப்போ இல்லன்னு சொன்ன உடனே அத நீ வேண்டான்னு வோதரி விட்டுட்டு வந்தப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்தது நீ ஏ பொண்ணுமா” இதைக் கேட்டவுடன் ரஞ்சிதா தன் அப்பாவை இடுப்போடு கட்டிக் கொண்டாள்.

 

இதை பார்த்து விட்டு வைஷ்ணவி “நீங்க ரெண்டு பேரூ சண்ட போட்டா அவ ஏ பொண்ணு சமாதானோ ஆயிட்டா உங்க பொண்ணா” என்று வம்பிழுக்க “நா எப்பவுமே அப்பா பொண்ணு தா” என்று ஒழுங்கு காட்டிவிட்டு சிரித்தாள் ரஞ்சிதா. தாய் தந்தை இருவரும் அவளுடைய சிரிப்பில் சங்கமித்துக் கொண்டனர்.

 

இரவு உணவை இன்பத்தோடு முடித்துக் கொண்டு அறைக்குள் வந்த ரஞ்சிதாவின் கண்களில் செல்வி வைத்து விட்டு சென்ற புகைப்படம் தென்பட்டது. அவே என்ன அவ்ளோ பெரிய அழகனா அந்தம்மா ரொம்ப ஓவரா பில்டப் குடுத்துட்டு போகுது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு புகைப்படத்தை எடுக்கச் சென்றவள் காலைல பாத்துக்குவோ என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டு மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

 

சிறிது நேரம் தூக்கம் வராமல் புரண்டவளின் கண்களில் மீண்டும் அந்த புகைப்படம் தென்பட்டது. ‘பேசாம இத பார்த்து தொலைச்சுடுவோ அப்பதா நிம்மதியா தூக்கோ வரூ” என்று சளிப்போடு எழுந்து வந்து அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். பார்த்தவுடன் சட்டென புகைப்படத்தை எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்து விட்டாள். 

 

“அப்பா சொன்னது கரெக்ட்டாதா இருக்கு” என்று சன்மான குரலில் சொன்னவள் திரும்பவும் புகைப்படத்தை பார்க்கத் தோன்றவே மீண்டும் அந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்து விட்டு புன்னகையுடன் படுத்து உறங்கிப் போனாள் ரஞ்சிதா.

 

இந்தப் பாராட்டுக்குறியவனோ காரியமே கண்ணாக மெத்தையில் உட்கார்ந்து அலுவலக ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான். கையில் பாலை எடுத்து வந்த செல்வி “என்னடா இன்னூ தூங்காம வேல பாத்துட்டு இருக்குற இந்தா இந்த பால குடிச்சிட்டு  சீக்கிரமா தூங்குடா” என்று பாலை அவன் முன்பாக நீட்டினாள். 

 

“எதுக்கும்மா சிரமப்பட்டு எடுத்துட்டு வந்த கூப்ட்டு இருந்தா நானே வந்துருப்பேன்ல பால அந்த டேபிள்ல வைம்மா கொஞ்சோ வேல இருக்கு நா அப்றமா குடிச்சிக்கிறே” என்று அக்கறையுடன் கூறினான் வீர் என்ற வீரராகவன்.

 

பாலை மேஜையின் மேல் வைத்துவிட்டு மகனருகில் வந்து உட்கார்ந்து “டேய் இன்னைக்கி பாத்த பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா நிச்சயத்துக்கு நல்ல நாள் பாக்க சொல்லீருக்கே ஒரு தடவ நீ வந்து அந்தப் பொண்ண நேர்ல பாத்தேனு வச்சுக்கோ அப்படியே அசந்து போயிருவ”

 

“நாந்தா நீ பாத்தா சரீன்னு சொல்லீட்டேன்ல டேட் பிக்ஸ் பண்ண உடனே ஏ கிட்ட சொல்லுங்க அப்பதா என்னால அன்னைக்கான ஆபீஸ் ஒர்க்க ஃப்ரீ பிளான் பண்ணி வைக்க முடியூ” என்று வீர் சொல்லிவிட்டு மீண்டும் அலுவலக ஆவணங்களில் கவனத்தை செலுத்த ‘அங்க நா அந்த பொண்ணு கிட்ட அவ்வளவு பில்டப் கொடுத்து பேசீட்டு வந்தா இவே என்னடான்னா கொஞ்சோ கூட உணர்ச்சியே இல்லாம இப்டி பேசீட்டு இருக்கா இவே கிட்ட பேசுறதே வேஸ்ட்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றார் செல்வி

 

குளித்து முடித்துவிட்டு கண்ணாடியின் முன்பு நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டு அந்த மேஜையின்மேல் இருந்த வீர் உடைய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள் ரஞ்சிதா.

 

அந்நேரம் பார்த்து அவளுடைய அலைபேசியில் அறிவிப்பு மணி ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தவளின் முகம் அனிச்ச மலரைப் போல் சுருங்கியது. அப்போது அறைக்குள்ளே நுழைந்த வைஷ்ணவி “என்னமா இன்னைக்கி காலைல சீக்கிரமாவே ரெடி ஆயிட்ட எங்கேயாவது வெளியே போக போறியா? ” என்று கேட்க சிறு பதட்டத்துடன் “ஆமாம்மா” என்று கூறிக் கொண்டே தன்னுடைய அலைபேசியை தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டாள் ரஞ்சிதா.

 

“சரி எங்க போனாலூ கூட ஓ ஃபிரண்டு ஐஸ்வர்யாவ கூட்டிட்டு போ சரியா” என்று கூறிவிட்டு வைஷ்ணவி சென்றுவிட மீண்டும் தன்னுடைய அலைபேசியை பார்த்த ரஞ்சிதா கண்ணனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை எடுத்துப் பார்த்தாள். அதில் அவன் உரிமையாக ‘என்ன கல்யாணத்துக்கு ரெடியாயிட்ட போல இருக்கு’ என்று கேட்டிருந்தான்.

 

கடுப்புடன் அந்தக் குறுஞ்செய்தியை தடயம் இல்லாமல் அழித்துவிட்டு தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் ரஞ்சிதா.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam