Visitors have accessed this post 383 times.

நானே வருவேன் – பகுதி 8

Visitors have accessed this post 383 times.

 பாகம் 8

தனியாக அமைக்கப்பட்டிருந்த பெண்கள் கழிவறைக்குள் சென்ற வித்யா நீண்ட வரண்டாவில் இருந்த கண்ணாடி முன்பு நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டு குழாயை திருகி தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து “என்ன ஆச்சு வித்யா? காம்டவுன் காம்டவுன் இந்த ஜாப் உனக்கு எவ்ளோ முக்கியோனு தெரியும்ல சொதப்பாம பெர்ஃபெக்டா செஞ்சுடு” என்று தனக்குத்தானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொண்டு துப்பட்டாவால் தன் முகத்தை துடைத்து விட்டு வெளியே வந்தாள்.

நேராக தனக்கு சோதனை வைக்கப்பட்ட இடத்திற்கு வந்தவள் தன்னுடைய இருக்கையை ஒரு வேகத்துடன் இழுத்து உட்கார்ந்து அதே வேகத்தில் முன்னாள் சென்று மும்முரமாக தன் பணியை செய்யத் தொடங்கினாள். அரை மணி நேரம் கழித்து அருகில் அமர்ந்திருந்தவர் “ஐ டன் இட் சார்” என்று கூறும் குரல் காதில் ஒலிக்க அதை கவனியாது வேகமாக தன்னுடைய பணியில் கவனத்தைச் செலுத்தினாள்.

சின்னம் வடிவமைப்பாளர் வடிவமைத்த சின்னத்தைப் பார்க்க அவன் அருகே வந்தான் வீரராகவன். ஒரு சின்ன செவ்வக வடிவத்தின் பின்னால் ஒரு பெரிய அருங்கோன வடிவம் உன்னை விட நான் தான் சிறந்தவன் என்பது போல் நின்றது. இந்த இரண்டு வடிவத்திற்கும் அவர் தேர்ந்தெடுத்திருந்த நிறமும் அதன் விளிம்பில் பொருத்தியிருந்த நிழல் நிறமும் மிகவும் அருமையாக இருந்தது. அதுவே அந்த சின்னத்திற்கு மேலும் அழகு கூட்டும் வகையில் அமைந்திருந்தது. இதைப் பார்த்துவிட்டு “வெரி குட்” என்ற வார்த்தைகளை உதிர்த்தான் வீரராகவன்.

அருகில் நின்ற தன் தந்தையை “அப்பா  டிசைன வந்து பாருங்க” என்று கூப்பிட்டான். அவரும் வந்து பார்த்துவிட்டு “நல்லா தாம்பா இருக்கு” என்று கூறினார். அனிச்சையாக வீரராகவன் அருகில் இருந்த வித்யாவின் கணினியில் கண்களை செலுத்த அவள் தான் செய்திருந்த வடிவத்தை அழித்துக் கொண்டிருந்தாள். ‘இது வேலைக்காகாது’ என்று தன் மனதுக்குள் நினைத்து தலையை குலுக்கி விட்டு தன் தந்தையின் அருகில் சென்று நின்று கொண்டான்.

கொடுத்த ஒரு மணி நேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்களே இருந்த நிலையில் செல்வராகவன் “என்னப்பா அந்த பொண்ணு இன்னூ எந்திரிச்சு வரல என்ன செய்யலா? ” என்று கேட்டார் தன் மகனிடம் “இன்னூ பத்து நிமிஷோ தான கொஞ்சோ வெயிட் பண்ணி பாப்போ” என்று வீர் கூறிவிட்டு வித்யாவை திரும்பி பார்த்தான். அவளுடைய கணினியில் லேசாகத் தெரிந்த பகுதியில் அங்கங்கே மனிதர்கள் மண்ணை அள்ளுவது போல் கட்டிடம் கட்டுவது போல் இருந்தது இதை பார்த்தவனுக்கு அருகில் சென்று என்ன அந்த வடிவம் என்று பார்க்க வேண்டும் போல் தோன்றியது. கைக்கடிகாரத்தை பார்த்தவன் இன்னும் எட்டு நிமிட அவகாசம் இருக்கவே வலது கையால் இடது கை மணிக்கட்டைப் பிடித்து தன்னுடைய ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

மூன்று நிமிடங்கள் கழித்து வித்யா தன் பார்வையை கணினியில் இருந்து அகற்றினாள். தன்னுடைய வேலையை திறம்பட செய்து முடித்த மனநிறைவோடு இருக்கையில் இருந்து எழுந்த வித்யா செல்வராகவனிடம் வந்து “சார் என்னோட வேலய முடிச்சுட்டே சார்” என்று கூறினாள். அவளுடைய சின்ன வடிவமைப்பை செல்வராகவனும் பார்க்கச் சென்றார்.

அதை பார்க்கச் செல்ல ஆவல் தூண்டினாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அதே இடத்தில் நின்றான் வீரராகவன். “வீர் இங்க வந்து பாரே” என்று அவனுடைய அப்பா மகிழ்ச்சியோடு அழைக்க தன்னுடைய விரைப்பை விட்டு விட்டு அங்கே சென்று பார்த்தவனின் உதடுகள் “அமேசிங்” என்ற வார்த்தையை தானாகவே உதிர்த்தது. அங்கிருந்து செல்வராகவன் சற்று நகர்ந்து வந்துவிட வீரராகவன் அந்த சின்னத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். மனிதனின் தலை வடிவத்தை நிழல் போல அமைத்து அதில் பல மனிதர்கள் கட்டுமான வேலைகளை அங்கும் இங்கும் செய்து கொண்டிருந்தனர் அதன் கீழே பில்டு யுவர் ட்ரீம்ஸ் இன் ட்ரூ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

“வீர்!” என்ற செல்வராகவனின் அழைப்பால் கணினியில் நிலைத்திருந்த தன்னுடைய சிந்தனையை கலைத்து தன் தந்தையிடம் வந்தான் வீரராகவன். “என்ன பா எந்த டிசைன் நல்லா இருக்கு?” என்று கேட்டார் செல்வராகவன். டிசைனிங்க பொருத்த அளவுக்கு ரெண்டு டிசைனூ நல்லாதா இருந்தது ஆனா அந்த பொண்ணோட டிசைன் மார்வ்லஸ்” ,  “அதுக்காகத்தா அந்த பொண்ணுக்கு உடனே நா அப்பாயின்மென்ட்லேட்டர் கொடுத்தே”.

“வேலைல வேணூனா அந்த குட்டிச் சாத்தா ஹீரோவா இருக்கலா ஆனா என்ன பொறுத்த அளவுக்கு அது பிஹேவியர்ல ஜீரோ. இதுக்கு மேல அந்த பொண்ணு கிட்ட நீங்களே பேசிக்கங்க” என்று கூறி அங்கு இருந்து சென்றான் வீரராகவன். செல்வராகவன் இருவரையும் அழைத்து சாரி மிஸ்டர் ஆதவ் உங்க டிசைனிங் எங்களுக்கு அவ்வளவு சேடிஸ்பேக்ஷனா இல்ல எனிவே குட் லக் ஃபார் யுவர் ஃபியூச்சர் நாங்க கம்பெனிலருந்து ஒங்களுக்கு டிஸ்மிஸ் லெட்டர் கொடுத்தா அடுத்து ஒங்களுக்கு வேற பக்கோ வேல கெடக்கிறது ரொம்ப சிரமமா இருக்கூ நீங்களே முன்வந்து ரிசைனிங் லெட்டர் கொடுத்துட்டீங்கன்னா அது உங்க ஃப்யூச்சருக்கு ரொம்ப நல்லது இந்த கம்பெனிக்கும் நல்லது என்ன சொல்றீங்க” என்று கேட்டவரிடம் ஆதவ் “நானே ரிசைனிங் லெட்டர் கொடுத்துர்ரே சார்” என்று வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவராமல் சிரமப்பட்டு சொன்னார். “குட்” என்று செல்வராகவன் சொன்னவுடன் பதிலுக்கு சிறிய புன்னகையை உதட்டோரம் வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் ஆதவ்.

அவன் செல்வதை கவலையுடன் பார்த்த செல்வராகவன் ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டு வித்யாவின் பக்கம் திரும்பி “வெல் கங்கிராஜுலேஷன் வித்யா உன்னோட டிசைன் எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு யூ ஆர் அப்பாயிண்டட் அஸ் எ லோகோ டிசைனர் இன் திஸ் கம்பெனி” என்று சிரித்த முகத்துடன் கூற வித்யாவின் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

“இன்னக்கே வேலையில ஜாயின் பண்ணிடவா சார்” ,  “கண்டிப்பா இப்பவே நீ வேலையில ஜாயின் பண்ணிடு ஆனா ஒரு முக்கியமான விஷயோ ஏ பையே முன்னாடி மட்டூ போய் நின்றாதமா அவ்வளவுதா ஏற்கனவே நீ செஞ்ச டார்ச்சர்ல கொல காண்டுல இருக்கா” ,  “என்ன பாத்தா கொல்லாம விட மாட்டாரு” ,  “கரெக்டா புரிஞ்சிக்கிட்ட புத்திசாலி பொண்ணுதா நீ போ ” என்று கலகலவென சிரித்தார் செல்வராகவன்.

“சரி சரி நீ போய் ஓ சீட்ல ஒக்காரு நாம ரெண்டு பேரூ இப்படி பேசிட்டு இருக்கறதா பாத்தா திரும்ப ஓ வேலய புடுங்குனாலூ புடுங்கிடுவா” ,  “சார் ஒரு 2 மினிட்ஸ் அம்மாகிட்ட மட்டூ பேசிட்டு வந்துர்ரே சார் ப்ளீஸ்”  என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள் வித்யா. “போய் சீக்கிரமாக பேசீட்டு வந்துரு” என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே வீரராகவனுடைய அறைக்கு வந்தார்.

சிரித்த முகத்துடன் தன் தந்தையை பார்த்த வீர் “என்னப்பா எல்லாத்தையூ முடிச்சிட்டீங்களா? ” ,  “ஆல் பிராப்ளம்ஸ் ஆர் சால்வ்டு இனி நீ காமா வேல செய்யலா” ,  “அந்த பொண்ணு கிட்ட ஏ முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லீட்டிங்கல்ல” ,   “அத நா ஸ்ட்ரிக்டா சொல்லீட்டே” ,  “நீங்க எவ்ளோ ஸ்டிரிக்ட்டா சொல்லீட்டு வந்துருக்கீங்கங்கறது நீங்க சிரிச்சுக்கிட்ட வந்தத பாத்தாலே தெரியுது” .  ‘அம்மாவு மகனூ ஒரே மாதிரி இருக்காங்க நம்ம என்ன செஞ்சாலூ கரெக்டா கண்டுபிடிச்சிட்றாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அசட்டுப் புன்னகை செய்தார்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam