Visitors have accessed this post 647 times.

நேர்மைக்குப் பரிசு

Visitors have accessed this post 647 times.

நேர்மைக்குப் பரிசு

பள்ளி விடுமுறை விடப்பட்டது. சிறுவர்களின் கொண்டாட்டத்தைக் கேட்கவும்  வேண்டுமா? அனைத்து மாணவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. புனிதன், பாண்டியன், வசந்தன் ஆகியோர் உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 விடுமுறையை எப்படிக் கொண்டாடுவது என்று அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

 பாண்டியனும் புனிதனும் பல வருடங்களாக ஒன்றாகப் படித்து வருகின்றனர்.

 ஒரே தெருவில் வசிக்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள் விடுமுறையை ஒன்றாகக் கழிப்பார்கள். அதனால் விடுமுறையை எப்படி கழிப்பது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

 வசந்தன் அவர்களுடன் இந்த வருடம்தான் படிக்கிறான். அவர்களும் புதிதாக தெருவுக்கு வந்துள்ளனர். தெருவுக்கு வந்ததும் பிரிந்தனர்.

 அப்போது புனிதன்  அவர்களுக்கு  ஞாபகப்படுத்தினான் . டேய்……நாளைக்கு ரெண்டு பேரும் தோப்புக்கு வர மறந்து விட வேண்டாம் …… நான் உங்களுக்காக பார்த்துக்கொண்டிருப்பன்  என்றான்.  இருவரும் சரி என்று தலையாட்டி விட்டு சென்றனர்.

 மறுநாள் காலை வசந்தன் குளித்து முடித்து தயாரானான். முகத்தில் பவுடர் பூசிக்கொண்டிருந்தான் . அம்மா அருகில் வந்தாள். “எங்கே போகிறாய்  வசந்தன்?” அவள் கேட்டாள்.

 

“என்னுடைய நண்பர்களைப் பார்க்கப் போகிறேன் அம்மா” என்றான் வசந்தன். நண்பர்களை பார்த்து என்ன செய்ய

போகிறாய்? “

 அம்மா…… எனக்கு விடுமுறை தானே. நான் விளையாட போகிறேனே ! சிணுங்கிய படியே கேட்டான் வசந்தன்.

                  என்ன விளையாடப் போகிறாய்?”

விடுமுறை என்றால் விளையாடத்  தான் போக வேண்டுமா?” வேறு பொழுதுபோக்கே  இல்லையா? அம்மா ஓயாமல் கேட்டாள்.

                 “அம்மா…. நாள் முழுக்க படி படி என்று  சொல்லிக்  கொண்டு இருக்கிறிங்க …. இந்த விடுமுறையிலாவது  விளையாடலாம் என்றால்….. அதையும் வேண்டாம் என்கு றீர்களே?”.

 வசந்தா உன் நன்மைக்காக தானே படி படி என்று  சொன்னேன். நன்றாகப் படித்தால்…. நன்றாகத் தேர்ச்சி பெற்றால் விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்து உயர்நிலையில் படிக்கலாம். நல்ல வேலைக்குப் போகலாம். நீ படிப்து உனக்காகத்தான். எங்களுக்காக இல்லை  ….. அதை முதலில் தெளிவாக புரிந்து கொள்.

 “சரி அம்மா இப்போ ஏன் விளையாட விடுறீங்கள் இல்லை ?”.

இங்கே  பார் ……உன்னை நான் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதியாரே  பாடி வைத்து விட்டு சென்றுள்ளார். 

                 ஆனால் விளையாட்டு மட்டுமே வாழ்க்கை அல்ல. விளையாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதி! அவ்வளவுதான். மற்ற நேரங்களை பயனுள்ள நேரமாக மாற்ற முடியாதா? “

 “அம்மா, இப்ப நான் என்ன தான்  செய்ய வேண்டும் என்று சொல்றீங்க ? “

வசந்தா  வர்ற  வருஷம் நீ 11ம் வகுப்பு படிக்கப் போகிறாய் .

 அதற்குப் பிறகு நீ உயர் தரம் கட்கவேண்டும்.  அது தொடர்பாக இப்போதே ஏதாவது படிக்கலாமே . அதைப் பற்றி முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது உனக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்குமே. “

 ” அம்மா நீங்க சொல்றது நல்ல அறிவுரையாகத்தான் உள்ளது”.

 “சரி சிறிது நேரம் விளையாடிவிட்டு வந்து படிக்கிற வழியை  பார்” .

 “சரி அம்மா நான் வருகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினான்” வசந்தன்.

பாண்டியன் பெரிதாகச்  சிரித்துவிட்டு  , ” “டேய்….. இவன் பெரிய அம்மா கோண்டுவா  இருப்பான் போலிருக்கே” என்றான்.

” சரி விடுடா ……நாளைக்கு வேகமா வந்து விடுவான்” என்றான்  புனிதன் .

       வசந்தன் கேட்டான்.

” ஆமா ……. இவ்வளவு நேரமும் என்ன விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தீங்க ?”

“அதை நீ பார்க்கத் தானே போறாய்!”என்ற புனிதன் ஒரு பேப்பரை எடுத்து பொட்டலம் திரட்டி, அது நிறைய மண்ணை அள்ளிப் போட்டு,அழகாக மடித்து, நூலால் கட்டி சாலையில் நடுவில் கொண்டுபோய் வைத்துவிட்டு ஒன்றுமே தெரியாதவன் போல திரும்பி வந்து மற்றவர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.

வசந்தன் கேட்டான்.

“டேய் ….. நீ என்னடா செய்திருக்கிறாய்?” “இப்ப நீ பார்க்கத்  தானே போகிறாய்” என்றான் பாண்டியன்.

 சிறிது நேரத்தில் இவர்கள் வயதை ஒத்த சிறுவன் ஒருவன் சைக்கிளில் வந்தான். கீழே கிடக்கும் பொட்டலத்தை பார்த்தான். சுற்றும்முற்றும் பார்த்தபடி சைக்கிளை விட்டு கீழே இறங்கினான். அந்த பொட்டலத்தை எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஏறி சிட்டாகப் பறந்தான்.

     புனிதனும்  பாண்டியனும் மற்ற சிறுவர்களும்,

“ஹேய் …….ஹேய்” என்று சிரித்து கும்மாளமிட்டார்கள்.

 புனிதன் சொன்னான்.

” பாண்டியா…… அவன் நேரா  வீட்டுக்குப்  போவான். யாருக்கும் தெரியாமல் பொட்டலத்தைப் பிரிக்கப் பார்ப்பான். உள்ளே மண் இருக்கிறதை பார்த்ததும் முகம் போகிற போக்கைப் பார்க்கணுமே!” என்று சொல்லிவிட்டு வயிறு குலுங்கச்  சிரித்தான்.

      உடனே பாண்டியன்…

“புனிதா அவன் முகம் இப்படித்தான் போகும்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி காட்டினான்.

 மீண்டும் எல்லோரும் ஹோ  என்று சிரித்தனர்.

           வசந்தன் ‘உம்’ என்று இருந்தான்.

புனிதன் அவனிடம் எல்லோரும் சிரித்துக் கொண்டுதானே இருக்கிறோம். உனக்கு மட்டும் சிரிப்பு வரவில்லையே என்றான்.

     ” சிரிப்பு என்பது விலங்குகளில்  இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் ஒரு அபூர்வமான விஷயம் ஆகும்.

 சிரிப்பு இயல்பாக வர  வேனும்.இப்படி அடுத்தவர்களை வருத்தப்படுத்தி வரக் கூடாது.  நீங்க அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.”

    ” டேய் அவன் என்னடா புத்தர் மாதிரி பேசுறான் .” என்று பரிகசித்தான் புனிதன் .

     “சரி வசந்தா …..நாங்க தான் தப்பு பண்றோம் . கீழே கிடக்கிற பொருளை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு போறாங்களே….. அது தப்பில்லையா? குற்றமில்லையா?பாண்டியன் சற்று கோபமாகவே கேட்டேன்.”

       ” பாண்டியா ……..அவங்க குற்றவாளியாகவே இருக்கட்டும். அந்தக் குற்றத்தை செய்ய தூண்டுவது நீங்கதானே .! நீங்க விளையாட்டா நினைத்து  வீதியில்  போடுகிற பொட்டலம்  அவனை குற்றம் செய்யத் தூண்டுகிறது.”  என்றான் வசந்தன்.

   “பாண்டியா இவன்கிட்ட பேசிக் கொண்டிருந்தால் நாம் எல்லாம் ஜாலியா விளையாட முடியாது “என்றான் புனிதன்.

       மீண்டும் ஒரு பேப்பரை எடுத்தான். பொட்டலம் போட்டு அதில் மண்ணை அள்ளிப் போட்டு அழகாக மடித்து கட்டி முன்புபோலவே சாலை நடுவே போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

     எதிரே ஒரு பெரியவர் வந்தார்.பணக்காரத் தோற்றத்தில் இருந்தார். அந்த பொட்டலத்தைக் குனிந்து  எடுத்தார். 

     புனிதன் சொன்னான் .

     “பாண்டியா இப்போது வேகமாக கடந்து போவார் பாரேன்” என்றான் புனிதன்.

       ” இந்த வயசுக்கு மேலயும் ஆசை விடவில்லை பார் …..”    நக்கலாய் சொன்னான் பாண்டியன்.

      ஆனால் பெரியவர் பொட்டலத்துடன்  செல்லவில்லை . சுற்றிலும் பார்த்தார். தோப்பில் கூட்டமாக இருந்த சிறுவர்களைப் பார்த்து  கையசைத்து கூப்பிட்டார் .

          “டேய் ……… இந்த பெருசுக்கு என்னடா ஆச்சு?”

        இப்படி காலை வாரி விட்டுடிச்சே!” இருவரும் புலம்பினார்கள்.

    தாத்தா மறுபடியும் இவர்களைப் பார்த்து கையசைத்து கூப்பிட்டார்.

வசந்தன் தாத்தாவின் அருகில் விரைந்து சென்றான். தாத்தா கொடுத்த பொட்டலத்தை வாங்கிக்கொணடான்.

       இது கீழே கிடந்தது ……உன்னோட பொட்டலமாப்பா?” என்று தாத்தா கேட்டார்.

        ” இல்லை தாத்தா”

   ” இது ஏதோ உணவு பொருள் மாதிரி இருக்கு. இதை யாராவது.  ஏழை கிட்டயோ , பசியில் இருப்பவரிடமோ கொடுத்து விடு சரியா ?”

           “சரிங்க தாத்தா !” 

அப்போது தாத்தாவின் அருகில் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவர் தாத்தாவை காரில் ஏற்றிக்கொண்டு விர்  என்று கிளம்பினார்.

       அப்போதுதான் பார்த்தான் வசந்தன்.

    செல்போன் ஒன்று கீழே  கிடந்தது. தாத்தாவின் செல்போன் ஆகத்தான் இருக்க வேண்டும். குனிந்து எடுக்க முனையும்போது அப்போது அருகில் வந்த  புனிதன் விரைந்து எடுத்தான்.

    “புனிதா ……..அந்த செல்போனை கொடுத்துவிடு “.

         நான் கொடுக்க மாட்டேன்…….தரையிலிருந்து கண்டு எடுத்தது”.

         “ஆனா அது தாத்தாவோட செல்போன்……….. அவர்கிட்ட திருப்பிக் கொடுக்க வேணும்”

         “நான் கொடுக்க மாட்டேன்…..” என்ற புனிதன் செல்போனை off செய்தான். பிறகு திறந்து உள்ளே இருந்த சிம் கார்டை நீக்கிவிட்டான்.

              அப்போது பாண்டியன் அருகில் வந்தான்.

     ” புனிதா…… சரியான காரியம் செய்தாய்….. செல்போன் கண்டெடுத்தால் உடனே சிம்கார்டை முதல்ல  நீக்கி விட  வேணும். அப்போதுதான் செல்  யார்கிட்ட இருக்கு என்று  கண்டுபிடிக்க முடியாது” என்றான்.

      வசந்தன் அறிவுறுத்தினான்.

    ” நீங்க ரெண்டு பேரும் பிழை செய்யறீங்க….. பொருள் யாருடையது என்று நமக்கு தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த செல்போன் தாத்தா உடையது என்று தெரிகிறது அப்போது  அவரைப் பார்த்து கொடுத்துவிடுகிறது தானே முறை” என்றான்.

       ” டேய் நாங்க என்னமோ திருடிட்ட மாதிரி பேசுற” என்ன்று புனிதன் எகிறினான்.

      ” இங்க நிண்டா  இவன் பேசிக் கொண்டுதான் இருப்பான் வா நாம் போகலாம் ” என்று  பாண்டியணை இழுத்துக்கொண்டு சென்றான் புனிதன். 

போகும் போது தன் கையில் இருந்த சிம் கார்டை தூக்கி எறிந்தான் .

    வசந்தன் ஓடிப்போய் அந்த சிம் கார்டை எடுத்துக் கொண்டான்.

    சிறிது நேரத்தில் தாத்தா அங்கு வந்தார் .  தம்பி என்ட போன் இங்கு விழுந்து விட்டது. பார்த்தியா  என்று கேட்டார். 

       வசந்தன் நடந்ததை சொன்னான்.

தன் கையில் இருந்த சிம் கார்டை கொடுத்தான் . தாத்தா நன்றியுடன் பெற்றுக்கொண்டார் .

      வீட்டில் அம்மாவிடம் நடந்த விவரங்களைச் சொன்னான். அம்மா  அவனை பாராட்டினார்.

        வசந்தன் சொன்னான் அம்மா விளையாட்டு என்கிற பெயரில் போக்கிரித்தனம் நடக்கிறது . நான் நாளையிலிருந்து கண்டிப்பாக கணனி வகுப்பு ஒன்றில் சேரப் போகிறேன். என்றான் மறுநாள் காலை கணனி வகுப்பில் சேர்வதட்காகச்சென்றான்.டிடிபி கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான்.

        இரண்டு மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய் பணம் கட்ட சொன்னார்கள் . வசந்தன் வெளியே வந்தான் . தாத்தா நின்றார் . தம்பி நீ எங்கே இங்கே என்று கேட்டார்.வசந்தன் சொன்னான்.

வசந்தனை உள்ளே அழைத்துச் சென்றவர்  உள்ளே இருந்த பணியாளரிடம் அவர்  தம்பி எனக்கு வேண்டப்பட்டவர். பணம் எதுவும் வேண்டாமல் பிடித்த பாடங்களைச் சொல்லிக் கொடுங்க என்றார் .

      தாத்தா நான் பணம் கட்டுகிறேன் என்று சங்கடத்துடன் நெளிந்தான். வசந்தன்.  தம்பி இது உன்னோட நேர்மைக்கு தாத்தாவுடைய பரிசு மறுக்கக் கூடாது என்றார் தாத்தா. அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்றவன் அம்மாவிடம் நடந்ததை  சொன்னான். நீ எப்பவும் போல நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேணும் என்றார்  அம்மா.  நிச்சயம் அம்மா என்று சிரித்தான் வசந்தன்.

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam