Visitors have accessed this post 806 times.

பொன்னாங்கண்ணி கீரை-மருத்துவ பயன்கள்

Visitors have accessed this post 806 times.

பகலில் விண்மீன்களை -நட்சத்திரங்களைப் பார்க்க முடியுமா என்றால் முடியும் என்கிறது இக்கீரை !

ஆம்,இக்கீரை ஒரு மண்டலம் சமையல் செய்தோ பச்சையாக சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரத்தை பார்க்கலாம் என்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள்

கிராமத்தில் 90 வயதில் கூட கண்ணாடி அணியாமல் உலாவுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இக்கீரையை

கண்ணுக்கு ஒளியை, தெளிவான பார்வையை இதற்கு இணையாக தரக் கூடியது கீரை  வேறொன்றும் இல்லை எனலாம்

“பொன்னை( தங்கத்தைக்) கொடுத்து பொன்னாங்கண்ணி வாங்கு” என்பது கிராமத்துப் பழமொழி

இது கண்ணை மட்டும் தெளிவாக்குவது இல்லை நமது உடம்பையும் பொன்னாக மாற்றும் சக்தி இதற்கு உண்டு

இக்கீரை தரையில் படர்ந்து வளரும் தன்மை கொண்டது வாய்க்கால் ,வயல் வரப்புகள், ஈரமுள்ள இடங்களில் எங்கும் பரவி வளர்ந்து கிடக்கும்.

இதன் சுபாவம் குளிர்ச்சி

இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து புரதச்சத்து இரும்புச்சத்து  ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன கூடவே வைட்டமின் ‘சி’யும் அடங்கியுள்ளது

 

இக்கீரையின் மருத்துவ பயன்கள்:

  • மூலநோய் நீங்க
  • கண் சூடு நீங்க 
  • உடல் அழகு பெற மற்றும்
  • பச்சையாக சாப்பிட தொண்டை புண், உணவுக்குழாய் புண் இவைகள் நீங்கும் மேலும்,
  • வாய் துர்நாற்றம் போகும்
  • கை கால் எரிச்சல் குணமாகும்
  • ஈரல் நோய் போக்கும் 
  • வயிற்று எரிச்சல் குணமாகும் 
  • சொரி சிறங்கு நீங்கும் 
  • இதயமும் மூளையும் வளம் பெறும் மேனியை பளபளக்கச் செய்யும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam