Visitors have accessed this post 313 times.

மனோபலம்

Visitors have accessed this post 313 times.

  1. பலமும் இல்லை
    🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
    பலஹீனமும் இல்லை
    🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

    புலியை பழகுபவர்  (TIGER TAMER) புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள,  புலிக்கு, தான் பயப்படுவது  தெரியாமல் இருக்க புலியைக்  குத்தூசியை வைத்து அவ்வப்போது குத்தி குத்தி அதை மிரட்டிக் கொண்டே இருப்பார். புலிக்கு தான் பயப்படுவது தெரிந்துவிட்டால், புலி அவரை அடித்துக் கொன்று விடும். இதனால் அவர் அப்படி நடந்து கொள்வார். இதனால் தனது பயத்தை புலிக்கு தெரியாமல் தன்னுள் மறைத்தே வைத்திருப்பார். அதாவது தனது பலவீனத்தை வெளிக்காட்டுவது கிடையாது. அப்படி அவர் பயப்படுவது புலிக்கு தெரிந்துவிட்டால், புலி  அவரை அடித்து கொன்றுவிடும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் தனது பலவீனத்தை மறைத்து வைத்து வாழ்வதற்கு கூட  இதுதான் காரணம். தனது பலஹீனம் தெரிந்துவிட்டால், மற்றவர்கள் நம்மை தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் மனிதர்களுக்கு எப்பொழுதும் உண்டு. மனிதன் ஒரு பயந்தாங்கொள்ளி. எனவே தங்கள் பலகீனத்தை வெளியில் காட்டுவது கிடையாது. உண்மையாகவே பெரும்பான்மையான மக்கள் பலஹீனத்தில் தான் வாழ்கிறார்கள். அதை வெளிக்காட்ட பயந்துகொண்டே வாழ்கிறார்கள். எனவே பலவீனத்தை மறைக்க பலம் உள்ளவனைபோல் நடிப்பது சரியானதாக இருக்க முடியாது. இது ஒரு ஆபத்தான நிலை. எனவே நமது பலம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது பலம் என்பது மனோபலம் கிடையாது. மனதிற்கு பலம் கிடையாது. அது தோன்றும் நேரத்திலேயே மறைந்து விடுகிறது. அங்கு பலமற்று தான் இருக்கிறது. அதை பிடித்துக் கொண்டாலும் பலம் கிடையாது. எனவே பலமான ஒன்று பலமற்றதாக  தோன்றுகிறது, பிறகு மறைகிறது. இந்த இயல்பான இயக்கத்தை புரிந்து கொள்கிற போது, நாம் எப்பொழுதும்  உறுதியான பொருளோடு இணைந்தே வாழ்கிறோம். இங்கே பலவீனமும் இல்லை பலமும் இல்லை.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam