Visitors have accessed this post 790 times.
எங்கே செல்கிறோம் எதற்காக செய்கிறோம் எவ்வாறு செய்ய போகிறோம் என்று நிலையில்லா நிற்பந்தத்திற்காக அன்றாட உழைத்து கலைத்து துடித்து நோகடித்து போராட வைக்கும் இந்த வாழ்க்கை..நம் உயிரே நிலையில்லா நிலையில் உள்ளதை மறந்து தற்காலிக சிக்கல்கள், கஷ்டங்கள், சூழ்நிலைகள் கண்டு சிந்தித்து அஞ்சுவது ஏனோ.. பிறரிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டி விட்டு செல்லாமல் அவ்வாறு எல்லாம் செய்வது கூடாது என்று நம் தலைமுறையினரிடம் எடுத்துரைப்பதே சிறந்தது.ஒவ்வொருவரும் இதனை கடைப்பிடித்தால் நாட்டில் தீமை நிலைக்காது..நம் தகுதி என்னவென்று நாம் தீர்மானிக்க வேண்டுமே தவிர மற்றவரின் கருத்திற்கு விளக்கம் அளிக்க கூடாது.. நம்மால் மட்டுமே இந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வெல்ல முடியும் என்றே இந்த இடத்தில் நம் சக்திக்கு உட்பட்ட வலிகளை வலிமையோடு எதிர்கொள்ள கடவுள் படைத்துள்ளார்.. மற்றவரின் வாழ்க்கையோடு ஒப்பிடுவதை தவிர்த்து நம் வாழ்க்கையை சிறப்பாக சீர் செய்து வெற்றிக்கு வித்திடும் வழியை நோக்கி பயனிப்பதே சிறந்த மனிதனுக்கான எடுத்துக்காட்டு..